search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்
    X

    உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்

    உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்னவென்பதையும், உடல்பருமன் யாருக்கு ஏற்படும் என்பதையும் விரிவாக கீழே பார்க்கலாம்.
    நம் உணவில் புரதச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கின்றன. ஆனால், இவையால் கூடும் கலோரிகளை எரிக்கும்

    அளவுக்கு, உடல் உழைப்பு இல்லை. இதனால், வயிற்றைச் சுற்றி எளிதில் கொழுப்பு செல்கள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. தொப்பை வந்துவிடுகிறது.

    பொழுதுபோக்கு என்றாலே ஹோட்டலுக்குச் செல்வது, சினிமாவுக்குச் செல்வது, டி.வி பார்ப்பதுதான். இந்த மூன்றுமே உடல் எடைக்கு வழிவகுப்பவை.தவறான

    நேரத்தில் சாப்பிடுவது, முறையற்ற தூக்கம் போன்ற மோசமான வாழ்வியல் முறையும், உடல் எடை அதிகரிக்க முக்கியமான ஒரு காரணம். சிலருக்கு, சிறு

    வயதிலேயே தோன்றும் மன அழுத்தமும் உடல் எடை அதிகரிக்க ஒரு காரணம்.

    உடல்பருமன் யாருக்கு ஏற்படும்?

    உடற்பயிற்சி, நடைப்பயிற்சி பழக்கம் இல்லாதவர்கள்.

    அதிக அளவு நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்கள்.

    மூன்று வேளையும் அதிக அளவு கார்போஹைட்ரேட்(அரிசி வகை உணவுகள்) உணவுகளைச் சாப்பிடுபவர்கள்.

    மன அழுத்தம் உள்ளவர்கள்.

    தைராய்டு, பி.சி.ஓ.டி பிரச்னை உள்ளவர்கள்.
    Next Story
    ×