search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டிராகன் பழம்
    X
    டிராகன் பழம்

    உடலுக்கு குளிர்ச்சி தரும் டிராகன் பழம்

    டிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை.
    இந்தப் பழத்தை பார்ப்பதற்கு நம்ம ஊர் சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாலை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் நிறம், வடிவம் மற்றும் திகைப்பூட்டும் பூக்கள் இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை "நைட் ராணி" என்று கூறப்படுகிறது. வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், அது மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழம் மையத்தில், இனிப்பு கூழ் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    டிராகன் பழம் மகரந்த சேர்க்கை வெளவால்கள் மற்றும் அந்துப்பூச்சிகளாள் இரவில் ஏற்படுகிறது. பழங்கள் சிவப்பு தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது, சிவப்பு தோல் மற்றும் சிவப்பு சதை உள்ளது, மஞ்சள் தோல் மற்றும் வெள்ளை சதை கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு பழம் 700 மற்றும் 800 கிராம் வரை எடையுள்ளதாக. ஸ்வீட் டிராகன் பழம் மென்மையான நறுமணத்தை கொண்டிருக்கிறது.
    டிராகன் பழம் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். இது தென் ஆசியாவில் இருந்து வந்தது. இது மிகவும் தித்திக்கும் சுவையைக் கொண்டது. இதய நோயாளிகள் இப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது.

    இந்த பழம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இப்போது சென்னையில் பலபகுதிகளில் இந்த பழம் விற்பனை செய்யப்படுகிறது.

    100 கிராம் பழத்தில் உள்ள  ஊட்டச்சத்துகள் தோரயமாக.

    நீர் 80-90 கிராம்
    கார்போஹைட்ரேட்கள் 9-14 கிராம்
    புரதம் 0.15-0.5 கிராம்
    கொழுப்பு 0.1-0.6 கிராம்
    இழை 0.3-0.9 கிராம்
    சாம்பல் 0.4-0.7 கிராம்
    கலோரிகள்: 35-50
    கால்சியம் 6-10 மி
    இரும்பு 0.3-0.7 மிகி
    பாஸ்பரஸ் 16 - 36 மி.கி.

    ஆரோக்கியமான பழம் டிராகன் பழம்.
    Next Story
    ×