search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்
    X

    உடற்பயிற்சியில் மாற்றம் அவசியம் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

    சில சமயங்களில் ஒரே மாதிரியான உடற்பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து வருவது உங்களுடைய குறிக்கோளை வீணடித்து விடும்.
    நீங்கள் உடற்பயிற்சிகளை செய்யத் துவங்குகிறீர்கள். சில நாட்களிலேயே பலன்களை பெற தொடங்குகிறீர்கள். சில மாதங்களுக்குப் பின்னர், நீங்கள் ஒரு சமதளமான அல்லது முன்னேற்றமில்லாத இடத்தில் இருப்பதை உணருவீர்கள். இந்த நேரங்களில் நல்ல பலன்களைப் பெற, எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மீண்டும் செய்தல், மற்றும் செய்யும் வேகத்தை அதிகரித்தல் போன்றவை உதவும்.

    ஒரே வரிசையில் ஒரே மாதிரியான பயிற்சிகளை திரும்பத் திரும்பச் செய்வதால் பயிற்சியின் மீதான உங்களுடைய ஊக்கம் குறைந்து கொண்டு வரும்..ஆகவே உங்களிடம் பலவகையான பயிற்சிகள் இருப்பதை உறுதி செய்தால் உங்களுக்கு வேண்டிய ஊக்கம் குறையவே குறையாது.

    நீங்கள் ஜிம்மில் இருந்து வந்த பின்னர், மூட்டுகளில் வலி ஏற்பட்டால் நீங்கள் சரியான வகையில் பயிற்சியை தொடங்கவில்லை அல்லது செய்யவில்லை அல்லது முடிக்கவில்லை எனலாம். இது போன்ற நேரங்களில் இலேசான கார்டியோவை சாதாரணமாகச் செய்து விட்டு, வலிமையான பயிற்சியை அல்லது பிற முன்னேறிய பயிற்சிகளை செய்யலாம்.

    ஒரே மாதிரியான பயிற்சிகளை திரும்ப திரும்ப செய்வதால் உங்களுடைய உடல் பகுதிகளுக்கு அதிகமாக பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும்.  இதனால் நீங்கள் சற்று தளர்வடைய ஆரம்பித்திருப்பீர்கள். எனவே உங்களுடைய பயிற்சியை நன்றாக திட்டமிடுங்கள். மேலும் இடையிடையே ஓய்வு கொடுப்பதன் மூலம் தசைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதையும் உறுதி செய்யுங்கள்.

    உங்களது பயிற்சியினால் நீங்கள் சோர்வடைந்து இருப்பீர்கள். ஆனால் அது உங்களுடைய முழு சக்தியையும் வடிகட்டி இருக்காது. எனவே நீங்கள் பயிற்சிக்குப் பின்னர் மிகவும் தளர்ந்து போகும் நிலையை  உணர்ந்தால் நீங்கள்  குறைந்த தீவிரமுள்ள பயிற்சிகளை செய்ய வேண்டும். பயிற்சிகளுக்கு இடையில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அறிகுறியாகும்.
    Next Story
    ×