search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி அதிகமானதால் வரும் உடல் ரீதியான உபாதைகள்
    X

    உடற்பயிற்சி அதிகமானதால் வரும் உடல் ரீதியான உபாதைகள்

    உடற்பயிற்சி அளவாக செய்வதே நல்லது. உடற்பயிற்சி அதிகமானதால் உடல் ரீதியான உபாதைகள் நிறைய வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    உடற்பயிற்சி அளவாக செய்வதே நல்லது. அது ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கி, உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். உடலில் இருக்கும் நுண்ணிய அழுக்குகளை வியர்வை வழியாக வெளியேற்றி நுரையீரலின் செயல்பாட்டை மேம்பட வைக்கும். தேவையற்ற கொழுப்பை கரைக்கும். உடல் பலத்தை கூட்டும். உடற்பயிற்சி அதிகமானதால் உடல் ரீதியான உபாதைகள் நிறைய வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சி பற்றிய சில அறிவுரைகள் :

    உடல் இளைக்க வேண்டுமானால் உடற் பயிற்சியுடன் மருந்து சாப்பிட வேண்டும். உடல் எடை கூட வேண்டுமானால் உடற் பயிற்சியுடன் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் அதிகமாகவும், கோடையில் குறைவாகவும் செய்ய வேண்டும். மிகவும் வயது முதிர்ந்தவர்கள், சிறு குழந்தைகள் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

    சுவாசக்கோளாறு, மூட்டுவலி, மூட்டு வீக்கம் இருப்பவர்கள், செரிமானக்கோளாறு இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது. கடினமான பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. கைகளை வீசி, வேகமாக நடப்பது. நிதானமாக ஓடுவது. குனிந்து, நிமிர்ந்து கைகளை ஆட்டுவது கூட உடற்பயிற்சி தான்.

    உடற்பயிற்சி முடிந்த பின் கண்களை மூடி சில நிமிடம் அப்படியே அமர்ந்து, மனதை ஒருநிலைப்படுத்தி, கடவுளையோ அல்லது நமக்கு பிடித்த ஏதேனும் ஒன்றையோ நினைத்து தியானம் செய்வது மன அழுக்குகளை வெளியேற்றும்.

    உடற்பயிற்சி முடிந்தவுடன் குளிக்கக்கூடாது. வியர்வை உலர்ந்த பின்பே குளிக்க வேண்டும்.

    இன்று உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்தே பள்ளிகள், கல்லூரிகள், சிறிய, பெரிய தொழில் நிறுவனங்கள் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். இப்போது ‘உலக யோகா தினம் கொண்டாடுகிறார்கள். விழிப்புணர்வு அதிகமாக்க அரசே முன் வருகிறது.

    இன்றைய சூழலில் வேலைப்பளு தாங்காமல் மன அழுத்தம் காரணமாக இளைஞர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். யோகா, தியானம் ஆகியன மன அழுத்தத்தைக் குறைத்து மனம் சமநிலைப்பட, அமைதியாக உதவுகின்றன.
    Next Story
    ×