search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    யோகா நித்ரா (ஆசன உறக்கம்)
    X

    யோகா நித்ரா (ஆசன உறக்கம்)

    யாரெல்லாம் தூக்கம் வராமல் தவிக்கிறார்களோ அவர்களுக்கு இந்த ஆசனம் ஒரு வரப்பிரசாதம். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    இந்த ஆசனம் முந்தைய காலத்தில் மேற்கொண்ட ஆசனம் ஆகும். நமது உடல் மற்றும் புத்தி இவற்றை அமைதியாக்க இந்த ஆசனம் உதவுகிறது. யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு இது உதவும்.

    இதை எப்படி செய்வது என்பதை வாழ்க்கை ஒரு கலையில் கற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
    20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை தருகிறது. தூங்கும் சமயத்தில் நரம்புகள் கிளர்ச்சியாவதிலிருந்து காக்கிறது.

    ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். தூக்க மாத்திரைகளின் தேவைகள் குறையும்.



    செய்முறை :

    வி‌ரி‌ப்‌பி‌ல் மல்லாக்க படுக்கவும். தலை ‌வி‌ரி‌ப்‌பி‌ன் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும்.

    துடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கவேண்டும்.
    மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும். உடல், மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்க வேண்டும்.

    இது போன்ற சாந்தமான நிலையில் நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், எதையும் கேட்கமாட்டீர்கள், புலன் உணர்வு இருக்காது.

    Next Story
    ×