search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதுமா?
    X

    வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதுமா?

    ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். வாரத்தில் எத்தனை நாட்கள் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கும் நல்லது என்பதை பார்க்கலாம்.
    வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் இது தவறான கருத்து.

    எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல் மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை.

    ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
    Next Story
    ×