search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சோர்விற்கு நிவாரணம் தரும் கூட்டு முத்திரை
    X

    சோர்விற்கு நிவாரணம் தரும் கூட்டு முத்திரை

    கணினியில் பணி செய்வதால் ஏற்படும் வலி, களைப்பிற்கும், மணிக்கட்டில் ஏற்படும் சோர்விற்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது இந்த கூட்டு முத்திரை.
    இம்முத்திரை இரு தனித்தனியான முத்திரைகளை இணைத்து ஒரே நேரத்தில் செய்வதால் இது கூட்டு முத்திரை அல்லது சம்யுக்த முத்திரை என்று வழங்கப்படுகிறது. இது சிகிச்சை முத்திரைகளில் ஒன்று.

    செய்முறை :

    விரிப்பில் அமர்ந்து வலது கை மோதிர விரலை மடித்துக் கட்டை விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும். இடது கை நடுவிரலை மடக்கி கட்டை விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.

    பயன்கள் :

    தினமும் 10 முதல் 15 நிமிடம் பயிற்சி செய்வதால், உடலின் சக்தி பெருகும். குறிப்பாக ஆர்த்ரைடிஸ் என்ற, மூட்டு, முழங்கால் வலிகள் தீரும். சுளுக்கு, தசைப்பிடிப்பிற்கும், நீண்ட தூரம் நடந்தால், மாடி ஏறுவதால், கணினியில் பணி செய்வதால் ஏற்படும் வலி, களைப்பிற்கும், மணிக்கட்டில் ஏற்படும் சோர்விற்கும்  சிறந்த நிவாரணி.
    Next Story
    ×