search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டுப்பாடம் செய்ய அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது?
    X

    வீட்டுப்பாடம் செய்ய அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது?

    உங்கள் குழந்தைகள் அடம் பிடிக்காமல் வீட்டுப்பாடம் செய்ய என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்து பார்க்கும் ஆர்வமும் துணிச்சலும் கொண்டிருப்பார்கள். ஆனால் ஹோம்வொர்க் செய்வதென்றால் மட்டும் அவ்வளவு தான் வீடே இரண்டாகிவிடும்.

    பெரும்பாலான வீடுகளில் அப்பாவும் அம்மாவும் தான் ஹோம்வொர்க் செய்கிறார்கள். ஆனால் இனிமேல் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் அடம் பிடிக்காமல் ஹோம்வொர்க் செய்ய வேண்டுமென்றால் இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க...

    குழந்தைளுக்குக் கொடுக்கப்படும் வீட்டுப்பாடத்தை பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் ஒரு அட்டவணைப்படுத்துங்கள்

    குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்களை ஒவ்வொரு பாடத்துக்கும் பெயராக வைத்து, டோரா பாடம் முடிந்ததா? சோட்டா பீம் எங்கே? என்று அவர்களிடம் கேட்கலாம். அது குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

    இதுபோன்ற விஷயங்களைப் பள்ளிக்குப் போய் உடன் பயிலும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். மற்ற குழந்தைகளும் ஆர்வத்துடன் அதைச் செய்வார்கள்.



    சில வீட்டில் குழந்தைகளை டியூசன் அனுப்புவார்கள். அங்கேயே குழந்தைகள் வீட்டுப்பாடத்தை முடித்து விடுவார்கள். அந்த தவறை மட்டும் இனிமேல் செய்யாதீர்கள். டியூசனில் வீட்டுப்பாடம் செய்யும்போது ஏதேனும் புரியாமல் இருந்தால் நண்பர்களிடம் பார்த்து அப்படியே காப்பி அடித்துவிடுவார்கள். அதற்கடுத்து சுயமாக பாடம் எழுதுவதில் ஆர்வமில்லாமல் போய்விடும்.

    என்ன வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது என்பதை டைரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளாமல், அவர்களிடமே நேரடியாகக் கேட்டு அவர்களின் வாயால் சொல்லச் சொல்ல கேளுங்கள். அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இண்டர்நெட்டில் தேடி, அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகள் ஆர்வமாக ஹோம்வொர்க் செய்ய நீங்களும் கொஞ்சம் ஹோம்வொர்க் செய்வது ஒன்றும் தவறல்ல.

    ஹோம்வொர்க் செய்யும்போது ஒரு பாடத்தை இவ்வளவு நேரத்துக்குள் முடிக்கச் சொல்லி அலாரம் வையுங்கள். அலாரம் அடிப்பதற்குள் முடித்துவிட்டால் ஏதேனும் பரிசு கொடுங்கள். வாரம் முழுவதும் அதேபோன்று வேகமாக செய்து முடித்தால், அவர்கள் விரும்பும் முக்கியமான ஏதேனுமொன்றை பரிசாகக் கொடுங்கள். அந்த ஆர்வத்திலேயே தினமும் வேகமாக வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.

    அதோடு அவர்களுடைய திறனை அங்கீகரித்து, திடீரென எங்காவது பிக்னிக் கூட்டிப் போகலாம்.

    குழந்தைகளின் மூளை தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை தான் கவனச்சிதறலின்றி இருக்கும். அதனால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிதாக ஓய்வு கொடுங்கள். ஆனால் அந்த நேரத்தில் டிவி பார்க்கவோ விடியோ கேம் விளையாடவோ அனுமதிக்கக் கூடாது.
    Next Story
    ×