search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாட்டும், குழந்தை வளர்ச்சியும்
    X

    பாட்டும், குழந்தை வளர்ச்சியும்

    குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பாடுவது, பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவை நட்பை வளர்க்கும் கலையை போதிப்பதுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.
    விஜயதசமி ஒவ்வொரு வருடம் வரும்போதும் ஏதேனும் ஒரு விஷயத்தை அல்லது கலையை குழந்தைகளுக்கு தொடங்க விரும்புவர் பெற்றோர். அந்த பட்டியலில் பாட்டுக்கு எப்போதுமே முதல் இடம் உண்டு நம் கலாசாரத்தில். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் எல்லாம் பாட்டு நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாகவே உள்ளது. பாட்டு கற்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

    பாட்டும், கணிதமும் இணைந்தவை எனலாம். பாட்டில் உள்ள தாளம், ராகம், ஜதி போன்றவைகளை குழந்தைகள் கற்பதின் மூலம் வகுத்தல், கூட்டல் போன்றவைகளில் கவனம் ஏற்படுவதுடன் சில வடிவங்களையும் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். சவுத் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் பாட்டு கற்றுக் கொள்வதை குழந்தைகளின் மூளையில் உள்ள மொழி, கற்றல், எண்ணறிவு போன்ற பகுதிகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாக கூறுகிறது.

    படிப்பு மட்டுமின்றி குழந்தைகளின் நுண்ணறிவு, சமூக மற்றும் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டு அறிவு, வியக்கத்திறன் உடலும், மனமும் இணைந்து செயல்படும் திறன், வார்த்தைகளின் ஒலியை தெரிந்து கொள்ளும் அறிவு போன்றவைகள் மேம்படுகின்றன.



    குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பாடுவது, பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவை நட்பை வளர்க்கும் கலையை போதிப்பதுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

    இசைக்கருவிகளை இசைக்கும்போது குழந்தைகளின் மனஅழுத்தம் குறைகிறது. மனச்சோர்வு நீங்குகிறது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவை தினசரி இசைக்கருவிகளை இயக்கும்போது பெருமளவில் குறைவதாக கூறப்படுகிறது. மேலும் இசைக்கருவியை இசைப்பவர்கள் ஐக்யூ அளவு 7 புள்ளிகள் வரையில் சிறுவர் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் கூடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    பாட்டு கற்கும்போது குழந்தைகளுக்கு சில ஒழுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எப்படி உட்கார்வது, கையை எப்படி அசைப்பது, இசை கருவி என்றால் அதை எப்படி பிடிப்பது, கால்களை கைகளை எப்படி வைத்துக் கொள்வது போன்றவைகள். அதேபோல் குருபக்தி, பொறுமை, நேர மேலாண்மை, இலக்குகளை அடைவது, அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் ஊக்கம் போன்றவைகள் இயல்பாக குழந்தைகள் கற்றுக் கொள்ள உதவுகிறது.

    குழந்தைகள் பாடுவதையோ, இசைப்பதையோ கேட்பவர்கள் அவர்களை பாராட்டுவதால் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை உயர்கிறது.
    Next Story
    ×