search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஓடி விளையாடு பாப்பா
    X

    ஓடி விளையாடு பாப்பா

    விளையாட்டு சூழலில் வளரும் குழந்தைகள் தான் எந்த இக்கட்டான நிலையையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள்.
    எந்தவித கவலையும் இன்றி ஓடியாடி, வியர்க்க வியர்க்க விளையாட ஏற்ற பருவமாக குழந்தை பருவம் உள்ளது. குழந்தைகள் மைதானத்தில் விளையாடும் போது தான் நல்ல உடல்வளர்ச்சி, மன வளர்ச்சி ஏற்படும். அது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அடுத்தவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தவும், வெற்றி, தோல்விகளை சமமாக பாவிக்கும் மனநிலையையும் ஏற்படும்.

    அப்படியான விளையாட்டு சூழலில் வளரும் குழந்தைகள் தான் எந்த இக்கட்டான நிலையையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். நவீனயுகத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் உலகை சுருக்கி விட்டன. அது ஏற்படுத்தும் வசதிகள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடக் கூடியதாக மாற்றி வருகிறது.

    இதன் பயனை பலரும் அனுபவிக்க தொடங்கி இருக்கிறார்கள். அரசும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறது. இதனால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்போன், கணினி போன்ற சாதனங்கள் வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் அதை பயன்படுத்துவதும் முறையில் தான் தற்போது பெரிய அளவில் சிக்கல் எழுந்து உள்ளது.

    தற்போது குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் செல்போன்கள், கணினி போன்ற தகவல் தொழில்நுட்பங்களை மிக எளிதாகவும், வேகமாகவும் கையாளுகிறார்கள். இது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி யையும், பெருமையையும் அளிக்கிறது. எனவே அவற்றை எந்த நேரமும் பயன்படுத்த குழந்தைகளை பெற்றோர் அனுமதிக்கிறார்கள்.



    ஆனால் அதில் குழந்தைகளை கவரும் வகையில் வித விதமாக விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டு இணைய தளங்களில் பதிவிடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக குழந்தைகள் விளையாட்டுகளம் மாறி இருக்கிறது. குழந் தைகள் வீட்டின் படியை தாண்டாமல் தனி அறைக்குள்ளேயே விளையாடும் அபாயம் வளர்ந்து வருகிறது. அது தான் செல்போன்களில் வரும் இணையதள விளையாட்டு. இது பொழுதுபோக்கு, மகிழ்ச்சிக்காக என்ற நிலையில் இருந்து உயிரை பறிக்கும் ஆபத்தான விளையாட்டாக மாறி வருகிறது.

    குறும்பு செய்யாமல் ஓரத்தில் அமர்ந்து குழந்தை விளையாடுகிறது. தன்னை தொந்தரவு செய்யாமல் இருக்கிறது என்று பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய ஆபத்தில் முடியும் அபாயம் உள்ளது. இணையதளத்தில் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமாக விளையாட்டுகள் பதிவிடப்படுகின்றன. அதை விளையாடி பழகும் குழந்தைகள் நாட்கள் செல்கிற போது அதற்கு அடிமையாகி விடுகின்றன.

    இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனை, செயல்திறன் பாதிக்கிறது. குழந்தைகளில் இயல்பாக இருக்கும் வேறு திறன்கள் முழுவதுமாக அழிக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் இணையதள விளையாட்டின் பிடியில் இருந்து மீண்டும் வர முடியாமல் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் அவர்கள் தங்களின் சுயநிலையில் இருந்து சிந்தித்து தன்னை திருத்திக் கொள்ள நினைத்தாலும், தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரிய தடையாக மாறுகிறது.

    எனவே குழந்தைகளுக்காக இணையதளத்தில் பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட செல்போன் விளையாட்டுகளில் குழந்தைகள் மூழ்கிவிடாமல் இருக்க பெற்றோர்தான் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதனால் ஏற் படக்கூடிய பாதிப்பால் கஷ்டத்தை அனுபவிக்கக் கூடியவர் களாக அவர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மாணவ-மாணவிகள் எந்த நிலையில் நண்பர்களுடன், தோழர் களுடன் கூடி ஓடியாடி விளையாடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதுதான் குழந்தைகளுக்கு உண்மையான மகிழ்ச்சியையும், ஆரோக்கியமான மனநிலையையும் வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
    Next Story
    ×