search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு வீடியோ கேம் வேண்டாம்
    X

    குழந்தைகளுக்கு வீடியோ கேம் வேண்டாம்

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், எந்த வகையிலும் குழந்தைகளின் அறிவுத்திறனை (ஐக்யூ) வளர்க்க உதவுவது இல்லை. குழந்தையின் சிந்திக்கும், செயலாற்றும் திறனை மழுங்கடிக்கின்றன.
    முன்பெல்லாம் வெளியே விளையாடும் நேரம் போக வீட்டுக்குள்ளே விளையாட, தாயக்கட்டை, பரமபதம், சொட்டாங்கல், பல்லாங்குழி அதன்பிறகு செஸ், கேரம் என பல விளையாட்டுகள் இருந்தன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பல குழந்தைகள், ஸ்மார்ட்போன் கேம் பிரியர்களாகத்தான் இருக்கிறார்கள்.

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், எந்த வகையிலும் குழந்தைகளின் அறிவுத்திறனை (ஐக்யூ) வளர்க்க உதவுவது இல்லை. குழந்தையின் சிந்திக்கும், செயலாற்றும் திறனை மழுங்கடிக்கின்றன.

    இருட்டில் அமர்ந்து, ஒளிர் திரை கேம் விளையாடுவதால், விழித்திரை நரம்புகள் பாதிப்பு, பார்வைத்திறன் குறைவு, திரையில் உண்டாகும் அதீத ஒளி, மூளை நியூரான்களைத் தூண்டி தூக்கமின்மையை ஏற்படுத்தும். அடுத்த நாள் காலையில் தாமதமாக எழ நேரிடும். அன்றைய நாள் சோம்பல் நிறைந்ததாக ஆகிவிடும். இதன் காரணமாக படிப்பில் கவனக் குறைவு, ஞாபகமறதி ஏற்பட்டு கற்றல்திறனும் பாதிக்கப்படும். ரத்தம், வன்முறை அதிகமாக இருக்கும் கேம் விளையாடுவதால் ‘டெம்பர் டான்ட்ரம்‘ எனப்படும் அதீத கோபம் மற்றும் முரட்டுத்தனத்துக்கு ஆளாகிறார்கள்.



    வீடியோ கேம் விளையாடிவிட்டு, நொறுக்குத் தீனிகள் சாப்பிடும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. பெற்றோர் பேசுவதைப் பார்த்துத்தான், குழந்தைகள் பேச ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து விளையாடும்போது குழந்தைகள்-பெரியவர்கள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். பெற்றோர் கண்காணிப்பிலும் இருப்பார்கள்.

    அதே நேரம் ஒரேயடியாக அவர்களை ஸ்மார்ட் போனில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதும் தவறு. அன்றைக்குப் படிக்க வேண்டியவற்றைப் படித்து முடித்த பிறகு குறிப்பிட்ட சிறிது நேரத்துக்கு மட்டும் விளையாட அனுமதிக்கலாம். முக்கியமாக, அறிவுத்திறனை மேம்படுத்தும் செஸ், ரூபிக் கியூப், கணித பசில் போன்ற விளையாட்டுகளை விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். குழந்தைகளுக்கு பிடித்த மியூசிக், நடனம், ஓவியம், நீச்சல் போன்ற பயிற்சிகளில் விடலாம். இதனால் வீடியோ கேம்களில் உள்ள மோகம் குறையத் தொடங்கும்.

    புத்தகம் வாசித்தல் மற்றும் அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுவதே நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்யச் சொல்லலாம். பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்யும்போது குழந்தைகளையும் பார்க்கில் விளையாட விடலாம். இதனால் ஓடிவிளையாடும் விளையாட்டுகளால் கிடைக்கும் நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
    Next Story
    ×