search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு ஏற்படும் நீர் வறட்சியை எப்படி தவிர்ப்பது எப்படி
    X

    குழந்தைகளுக்கு ஏற்படும் நீர் வறட்சியை எப்படி தவிர்ப்பது எப்படி

    குழந்தை சீரியஸ் நிலமையில் இல்லாமல் லேசாக தண்ணீர்ச்சத்து குறைந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனைப் பெறுங்கள்.
    பெரியவர்களுக்கு ஏற்படுவது போன்றே குழந்தைகளுக்கும் டீஹைட்ரேஷன் ஏற்படும். குழந்தையிக்கு தேவையானளவு தண்ணீர் இல்லையென்றால் உடனடியாக உணர்ந்து அதனை நிவர்த்தி செய்திட வேண்டும் இல்லையெனில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக்கூடிய ஆபத்துக்களும் உண்டு.

    குழந்தைக்கு நீர்சத்து குறைவாக இருப்பதை பெற்றோர் உணர்வதற்கு சில அறிகுறிகள்.

    ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருக்கும். சிறுநீர் அடர்த்தியாகவும் வழக்கதை விட நாற்றமெடுக்கும். உதடுகள் வறண்டு காணப்படும். குழந்தை தொடர்ந்து சோர்வாகவே இருக்கும். அழும் போது கண்ணீர் வராது. குழந்தையின் கண்கள் அமிழ்ந்து உள்ளே சொருகியிருக்கும். குழந்தையின் உள்ளங்கை மற்றும் கால் சில்லென்றாகிவிடும். சருமத்தில் திட்டுகள் தோன்றும்.

    பெரியவர்களைப் போல குழந்தைகளால் ஒரு சத்து குறைந்தாலும் அதனை எதிர்த்து போராட முடியாது. உடலில் நிகழும் சின்ன சின்ன மாற்றங்களுக்கும் குழந்தை சட்டென பாதிக்கப்படும். குழந்தையின் நிலமை மிகவும் சீரியசாக இருக்கிறது என நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    குழந்தை சீரியஸ் நிலமையில் இல்லாமல் லேசாக தண்ணீர்ச்சத்து குறைந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனைப் பெறுங்கள். திட உணவுகள் கொடுப்பதை தவிர்த்து தண்ணீர்சத்து நிரம்பிய உணவுகளை கொடுங்கள். மூன்று மாதத்திற்கும் குறைவான குழந்தையென்றால் தாய்ப்பால் வழக்கத்தை விட அதிகமான முறை கொடுங்கள்.



    மூன்று மாதத்திற்கும் அதிகமான குழந்தை உடனடியாக தண்ணீர்ச்சத்து வரவேண்டுமென்றால் மருத்துவர் ஆலோசனைப்படி குழந்தைக்கான எலக்ட்ரோலைட்ஸ் பவுடர் வாங்கி கொடுக்கலாம். குழந்தையின் வயது, எடை பொருத்து அளவு மாறுபடும் என்பதால் மருத்துவ ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும்.

    குழந்தைக்கு ஒரு நாளில் எத்தனை முறை தண்ணீர் கொடுக்கிறீர்கள் என்று கவனியுங்கள். குறிப்பாக வெயில் காலங்களில் திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டது என்றால் உணவைத் தவிர தண்ணீர் எத்தனை முறை கொடுத்திருக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.

    குழந்தைக்கு கார்பனேட்டட் டிரிங்க்ஸ் கொடுக்கக்கூடாது. செயற்கையான பானங்கள் கொடுப்பதால் அது குழந்தையின் பல் வளர்ச்சிக்கும், உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்படும். அதே போல ஜூஸ் வகைகளையே அதிகம் கொடுக்கக்கூடாது.

    குழந்தைக்கு காய்ச்சலாக இருந்தால் உடலில் உள்ள தண்ணீர்சத்து விரைந்து குறைய வாய்ப்புண்டு அதனால் காய்ச்சல் நேரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதே போல உணவு ஒவ்வாமை அல்லது அஜீரணம் காரணமாக டயேரியா,வாந்தி போன்றவற்றால் குழந்தை பாதிக்கப்பட்டாலும் சட்டென உடலில் உள்ள தண்ணீர்ச்சத்து குறையத்துவங்கும்.

    Next Story
    ×