search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண் குழந்தைகளை கவரும் பிரம்மாண்ட பார்ட்டி பிராக்ஸ்
    X

    பெண் குழந்தைகளை கவரும் பிரம்மாண்ட பார்ட்டி பிராக்ஸ்

    அடுக்கடுக்கான பலதரப்பட்ட துணிகள் இணைத்து உருவாகும் ஆடைகள் அணியும் பெண் குழந்தைகள் உயிரோவியமாய் உலா வரும் பொம்மைகள் போல காட்சி தருகின்றனர்.
    நமது வீட்டின் குட்டி இளவரசிகளாக உலா வரும் பெண் குழந்தைகளுக்கான வண்ணமயமான ஆடைகள் புதிய வடிவமைப்பில் நவீன டிரெண்டிற்கு ஏற்ப விற்பனைக்கு வந்துள்ளன. இளந்தேவதைகளுக்கு உரிய நவீன ஆடைகள் அடர்த்தியான வண்ண சாயல் என்பதுடன் மென்மையான வண்ண சாயல் அதிகம் கொண்டவாறு வருகின்றன.

    புதிய ஆடைகள் விருந்துகள், விழாக்கள் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான வடிவில் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் அழகிய வேலைப்பாடுகள் நவீன தொழில் நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளதால் கண்ணை கவரும் வகையில் உள்ளன. அடுக்கடுக்கான பலதரப்பட்ட துணிகள் இணைத்து உருவாகும் ஆடைகள் அணியும் பெண் குழந்தைகள் உயிரோவியமாய் உலா வரும் பொம்மைகள் போல காட்சி தருகின்றனர்.

    விதவிதமான குட்டி தேவதை ஆடைகள்:

    குட்டி தேவதைகள் அணிகின்ற ஆடைகள் எனும்போது அழகிய பிராக், கவுன், புல் பிராக், லெஹன்கா மஸ்தானி, அனார்கலி, மசக்கலி என பல பெயர்களில் மாடர்ன் மற்றும் இந்திய கலாசார ஆடைகள் வருகின்றன. அத்துடன் நமது பாரம்பரிய பட்டு பாவாடை சட்டை, குட்டீஸ் போன்றவையும் அசத்துகின்றன. இவையனைத்தும் அவ்வப்போது புதிய வடிவமைப்புகள் மற்றும் சில வேறுபாடுகள் செய்யப்பட்டு நவீன வடிவில் வருகின்றன. எப்படி இருப்பினும் பெண் குழந்தைகள் அணிகின்ற ஆடைகள் அனைத்தும் ஒவ்வொரு விதமான தனிசிறப்பு கொண்டவையாக உள்ளன.

    பிரம்மாண்டமான பார்ட்டி பிராக்:


    பெண் குழந்தைகள் எனும்போது வயதுக்கு தக்கவாறுகுட்டை பிராக் மற்றும் நீள பிராக் போன்றவை வருகின்றன. ஆனால் தற்போது அதிகளவு நீளமான பிராக்களே ஆர்வத்துடன் வாங்கப்படுகின்றன. நீளமான பிராக் என்பவை இரட்டை மற்றும் மூன்று துணிகள் வரிசைப்படுத்தப்பட்டு மேற்புறம் அழகிய நெட் துணி பூ வேலைப்பாடுகள் மற்றும் சரிகை வேலைப்பாடுகள் செய்யப்படும். பெரிய அளவிலான பூக்கள் நெட் துணியில் உருவாக்கப்பட்டு தோள் பகுதியில் இருந்து வளைவாக கீழ்பகுதி வரை நீண்ட கொடி போல் படர விடப்படும் பிராக் இரட்டை வண்ண சாயலுடன் கிடைக்கின்றன. மெல்லிய வண்ண சாயல் பூக்கள் என்றால் அடர்த்தியான பின்னணி ஆடையமைப்பு உள்ளவாறு உருவாக்கப்படுகிறது.

    உலோக பூக்கள், மணி பூக்கள், லேஸ்யால் உருவான பூக்கள், சரிகை மற்றும் எம்பிராய்டரி பூக்கள் என பலவிதமான பூக்கள் பூத்திருப்பது போன்ற நீளமான பிராக் கிடைக்கின்றன. இவை பாதம் வரை நீண்ட ஆடை என்பதால் அணிந்த பெண் குழந்தை ஓர் இளவரசி போல் கம்பீரமாய் நடைபயில்வாள்.

    அலங்கார பொருட்கள் இணைப்புடன் கூடிய ஆடைகள்:

    நாம் வாங்கும் ஆடைக்கு ஏற்ப அதற்குரிய இணைப்பு அலங்கார பொருட்களை தனித்தனியாக வாங்குவோம். ஆனால் தற்போது கவுன் மற்றும் பிராக் மாடல் ஆடைகளுக்கு ஏற்ற காதணி, கழுத்து மாலை, இடுப்பில் கட்டும் மணிபட்டை, காலணி மற்றும் பிரேஸ்லெட் வளையல் போன்ற அனைத்தும் இணைத்து கிடைக்கின்ற ஆடைகளும் வருகின்றன. இதன் மூலம் எந்த டிரஸ் எந்த மாதிரி அலங்கார பொருள் அணிய வேண்டும் என்ற கவலையே ஏற்படாது. அத்துடன் ஆடைக்கேற்ற அழகிய வடிவமைப்பு பொருட்கள் என்பதால் அணியும் அனைவரும் ஓர் தனிக்கம்பீர தோற்றத்துடன் ஜொலிப்பர்.

    ஜொலிக்கும் பாரம்பரிய ஆடைகள்:

    பாரம்பரிய ஆடைகள் எனும்போது லெஹன்கா, மஸ்தானி, மசக்கலி, பாவாடை சட்டை போன்ற ஆடைகள் அதிகமாக சரிகை வேலைப்பாடும், எம்பிராய்டரி செய்யப்பட்டும் கிடைக்கின்றன. இதில் வருடத்திற்கு ஒருமுறை சில மாற்றம் செய்யப்பட்டு புதிய கற்கள் மற்றும் மணிகள் பதித்தவாறும், அதிக பொலிவு கொண்ட தங்க மற்றும் வெள்ளி நிற சரிகை வேலைப்பாடும் உள்ளவாறு உருவாக்கப்படுகிறது. இவைகளும் ஓர் குட்டி இளவரசி போல தோன்றும் வகையில் நீண்ட கைகள், கழுத்துடன் காலர், பதக்கங்கள் கொண்ட மேலாடை என பிரம்மிப்புடன் உலா வருகின்றன.
    Next Story
    ×