search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புதிய பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களும், பாதிப்புகளும்
    X

    புதிய பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களும், பாதிப்புகளும்

    பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு பள்ளியில் இருந்து புதிய பள்ளிக்குச்செல்லும் போது நிறைய சவால்களை சந்திக்கும் நிலை உருவாகும்.
    பணியிடம் மாற்றம் காரணமாக சிலர் குடும்பத்துடன் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்வதுண்டு. சிலர் வசதிவாய்ப்பு காரணமாக தங்களது இருப்பிடங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதுண்டு. இன்னும் சிலர் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக சிறந்த கல்வி நிலையங்கள் இருக்கும் இடத்திற்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றுவார்கள்.

    இவ்வாறு ஓரிடத்தில் சில ஆண்டுகள் தங்கிவிட்டு பின்னர் வேறு இடத்திற்கு மாறும்போது, அந்த மாற்றம் எளிதாக இருப்பதில்லை. பழகிய நண்பர்களை விட்டுச்செல்லவேண்டியிருக்கும். புதிய இடத்தில் புதிய நண்பர்கள், புதிய அனுபவங்கள் பெறுவது ஆரம்பத்தில் கடினமாகவே காணப்படும். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு பள்ளியில் இருந்து புதிய பள்ளிக்குச்செல்லும் போது நிறைய சவால்களை சந்திக்கும் நிலை உருவாகும்.

    ஏற்கனவே படித்த பள்ளியில் ஆசிரியர்கள் நன்கு அறிமுகம் ஆகியிருப்பார்கள். அந்த பள்ளியின் சட்டதிட்டங்கள் நன்கு தெரிந்திருக்கும். உடன் படிக்கும் நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். இந்த நிலையில் புதிய பள்ளியில் சேரும்போது முதலில் புதிய நண்பர்களை உருவாக்கி கொள்வதே பெரிய சவாலாக இருக்கும். அடுத்து ஆசிரியர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற கடினமாக உழைக்க வேண்டும். உங்களது கல்வி அறிவை வெளிப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள், சக மாணவர்களின் அன்பை பெறலாம். அதற்காக கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

    இதுபோன்ற சூழ்நிலையில் பள்ளிக்குழந்தைகளின் மனநிலையில் மாற்றங்களும், பாதிப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த கடின சூழ்நிலையில் சிலர் தடம் மாறிப்போவதும் உண்டு. இத்தகைய சிக்கல்களில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்...



    * புதிய இடத்திற்கு செல்லும் போது ஏற்படும் பதட்டத்தை தவிர்க்க வேண்டும். இயல்பாக அனைவரிடமும் பழக தயாராக இருப்பது அவசியம்.

    * நீங்களாகவே முன்வந்து புதிய நண்பர்களுடன் உங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.

    * உங்களது திறமைகள், தனித்தன்மைகள் மூலம் நண்பர்களை எளிதில் உங்கள் வசப்படுத்தலாம். உதாரணமாக உங்களுக்கு ஓவியம் வரைவதில் திறமை இருந்தால் புதிதாக அறிமுகம் ஆகும் நண்பர்களிடம் உங்கள் ஓவியத்திறமையைக்காட்டி அவர்களை அசத்தலாம்.

    * அதுபோல உங்கள் விளையாட்டுத்திறன், பிற கைவினைத்திறன் மற்றும் போட்டித்திறன் போன்றவற்றை வெளிப்படுத்தி புதிய நண்பர்களை கவரலாம்.

    * உணவு இடைவேளையின் போது நீங்கள் எடுத்துச்செல்லும் உணவுகளை சக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் அவர்களது அன்பையும், நட்பையும் பெற முடியும்.

    * புதிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களிடம் பேசுவதற்கு தயங்கக் கூடாது. பாடங்களிலோ அல்லது புதிய பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்தோ ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் அவர்களுடன் பேசி தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

    * புதிய பள்ளியில் உங்களிடம் யாராவது வம்பு செய்தால் அவர்களுடன் மல்லுக்கட்டி போட்டிபோட வேண்டாம். அமைதியாக அவர்களிடம் பேசி புரியவைக்க வேண்டும். அதேநேரத்தில் அவர்களது குறும்பு எல்லை மீறும்போது அதை ஆசிரியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது.
    Next Story
    ×