search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களே முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள்
    X

    மாணவர்களே முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள்

    நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்ற உறுதியான எண்ணம், இருந்தால் அவன் வாழ்வில் உன்னதமான நிலையை அடைவான்.
    நாம் எந்த செயலை மேற்கொண்டாலும் எல்லாமே வெற்றி பெறும் என்று எண்ணிவிட முடியாது. வெற்றி என்று ஒன்று இருந்தால் தோல்வியும் கூடவே வரும். நாம் தொடர்ந்து வெற்றி பெற்றோமே, இப்படி தோல்வியை சந்தித்து விட்டோமே என்று கலங்கி விடக்கூடாது. இருளும், ஒளியும் உலகின் இயற்கை. அதைப்போலத்தான் வெற்றியும், தோல்வியும். இன்பமும், துன்பமும்.

    இதைத்தான் இடுக்கண் வருங்கால் நகுக... என்கிறார் திருவள்ளுவர். துன்பம் வரும்போது எந்த நிலையிலும் துவண்டு போகக்கூடாது. இவ்விதம் துவண்டு போவதால் பொருளே இல்லை. துன்பத்தின் பின்னால் நிச்சயமாக இன்பம் வரும். இந்த உலகத்தில் சாதனை படைத்து மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் எல்லாம் தம்முடைய அரும்பெரும் முயற்சிகளால் முன்னேறியவர்கள்தான்.

    அவர், இவர் என்றில்லாமல் நம் நாட்டில் மட்டுமின்றி எந்த நாட்டிலும் முன்னேற்றம் கண்டவர்கள் அனைவரும் முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள்தான். ஆம். கடின உழைப்பால் முன்னேறியவர்கள்தான். பெண்களே எத்துறையை சர்ந்தவர்களாக இருந்தாலும் அத்துறையில் அவர்கள் சாதனை புரிந்தவர்களாக விளங்கிட வேண்டும். அந்த சாதனை சாதாரண சாதனையாக இருத்தல் கூடாது.



    அரும்பெரும் சாதனையாக இருக்க வேண்டும். அதற்கு பெரும் உழைப்பு தேவை. ‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்’ என்று வள்ளுவர் பெருமான் ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் இதையே வலியுறுத்தி கூறுகிறார். கடினமாக உள்ளதே எவ்விதம் செய்யப்போகிறோம் என்கிற ஒருவித கலக்கம், வெற்றி பெறுவோமோ, பெற மாட்டோமோ என்ற தளர்ச்சி கூடவே கூடாது.

    முயற்சி செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும். அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் என்று கூறிய வள்ளுவர் பெருமான், அடுத்த அடியில் ‘பெருமை முயற்சி தரும்’ என்று கூறுகிறார். அதாவது நமது முயற்சிகள் நிச்சயமாக பெருமையை கொண்டு சேர்க்கும் என்கிறார். புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன் இவ்விதம் கேட்பது யார், வள்ளுவர் பெருந்தகைத்தான்.

    புகழை அடைய முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல் தங்களை இகழ்ந்து பேசுவோரை ஏன் நொந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஒருவன் புகழ் அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அவன் சார்ந்த துறையில் கஷ்டப்பட வேண்டும். கண் துஞ்சாமல் இரவு, பகல் பாராது உழைக்க வேண்டும். அவனுடைய அரும்பெரும் முயற்சியால் நிச்சயமாக நல்ல பலனை பெறுவான்.



    நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழிக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்ற உறுதியான எண்ணம், நம்பிக்கை, முயற்சி, பயிற்சி இருந்தால் அவன் வாழ்வில் உன்னதமான நிலையை அடைவான்.

    இவ்விதம் கேட்பது யார், வள்ளுவர் பெருந்தகைத்தான். புகழை அடைய முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல் தங்களை இகழ்ந்து பேசுவோரை ஏன் நொந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஒருவன் புகழ் அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அவன் சார்ந்த துறையில் கஷ்டப்பட வேண்டும்.

    கண் துஞ்சாமல் இரவு, பகல் பாராது உழைக்க வேண்டும். அவனுடைய அரும்பெரும் முயற்சியால் நிச்சயமாக நல்ல பலனை பெறுவான். நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழிக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்ற உறுதியான எண்ணம், நம்பிக்கை, முயற்சி, பயிற்சி இருந்தால் அவன் வாழ்வில் உன்னதமான நிலையை அடைவான்.
    Next Story
    ×