search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்
    X

    மாணவர்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்

    இளைய தலைமுறையினரிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள், திறமை இருந்தாலும் அவர்களால் எதிர்பார்த்தபடி வெற்றிகளைப்பெற முடியாததற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.
    இன்றைய இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக மாணவ மாணவிகளிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், திறமை இருந்தாலும் அவர்களால் எதிர்பார்த்தபடி வெற்றிகளைப்பெற இயலவில்லை. அதற்கு காரணம் என்ன என்று அறிந்துகொள்வோம் வாருங்கள்...

    முயலுக்கும், ஆமைக்கும் இடையே நடந்த ஓட்டப் பந்தயம் குறித்த கதையை அறிந்திருக்கலாம். முதலில் வேகமாக ஓடி வந்த முயல், ஆமை வருவதற்கு நேரம் ஆகும், அதுவரை கொஞ்சம் ஓய்வு எடுப்போம் என்று தூங்கியது. அந்த உறக்கம் நீண்ட உறக்கமாக இருந்ததால் மெதுவாக நடக்கும் ஆமை போட்டியில் ஜெயித்தது. ஆமையை விட வேகமாக ஓடும் திறமை இருந்தபோதிலும் தனது அதீத நம்பிக்கையால் முயல் தோற்றுப்போனது.

    இதைப்போலத்தான் இன்றைய இளைய தலைமுறையினர் உள்ளனர். அவர்களிடம் திறமை இருக்கிறது. புத்திசாலித் தனமான செயல்பாடுகள் உள்ளன. ஆனால் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஒரு செயலைச்செய்ய சிறப்பாக திட்டமிடுவார்கள். அதன்படி செயல்படவும் தொடங்குவார்கள். ஆனால் அந்த வேகம் சில காலத்துடன் நின்றுவிடும். இதனால் அவர்களால் எதிர்பார்த்த வெற்றியை பெற இயலாது.



    இதை தவிர்க்க சில யோசனைகள்:

    எந்த ஒரு காரியத்தை திட்டமிட்டாலும், அதன்படி நடக்க முன்வரவேண்டும். எந்த நிலையிலும் அதில் இருந்து பின்வாங்க கூடாது.

    ஒரு காரியத்தில் இறங்கும் முன்பு தீர யோசிக்கவேண்டும், திட்டமிடவேண்டும். ஆனால் காரியத்தை தொடங்கிவிட்டால் ஒருபோதும் அதை நிறைவேற்றுவதில் தாமதம், பின்வாங்குதல் கூடாது.

    பொறுமையுடன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியதால் தான் ஆமை வெற்றி பெற்றது. ஆனால் திறமை இருந்தும், முதலில் ஓடி வந்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், தனது சோம்பேறித்தனத்தால், அதிகமான நம்பிக்கையால் வெற்றிவாய்ப்பை இழந்தது முயல். அதுபோல நாம் இருக்க கூடாது.

    எனவே திட்டமிட்டு உழைத்து வெற்றியைப்பெற முயற்சி செய்யவேண்டும்.
    Next Story
    ×