search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை
    X

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை

    குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன்பாக முத்தம் கொடுப்பது, அணைத்துக் கொள்வது, டாட்டா காண்பிப்பது என்று உற்சாகமாக வழி அனுப்பி வையுங்கள்.
    விடுமுறையை குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்த குழந்தைகளை பள்ளி வாழ்க்கைக்கு பழக்கப்படுத்துவது பெற்றோருக்கு சற்று சிரமமாகவே தோன்றும். குழந்தைகளிடமும் விடுமுறை சூழலே பிரதிபலிக்கும். பள்ளிக்கூடம் திறந்து விட்டதால் குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து புதிய சூழலுக்கு தங்களை தயார்படுத்த தடுமாறுவார்கள்.

    அதிலும் புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அந்த சூழலுக்கு மாற சில காலம் பிடிக்கும். அதுவரை குழந்தைகளிடம் பள்ளியை பற்றி பெற்றோர் உதிர்க்கும் வார்த்தைகள் நேர்மறையான நல்ல தகவல்களாக இருக்க வேண்டியது அவசியம். ‘நீ விரும்பும் விஷயங்கள் எல்லாமே பள்ளியில் இருக்கிறது. சந்தோஷமாக பள்ளிக்கு போகவேண்டும்.

    அங்கே இருப்பவர்கள் அனைவரும் உன்னுடைய நண்பர்கள்...’ என்கிற ரீதியில் பேசி பள்ளி சூழலுக்கு அவர்களை ஐக்கியப்படுத்த வேண்டும். பொதுவாகவே அம்மா சொல்லும் எந்தவொரு விஷயமும் உண்மையாகத்தான் இருக்கும் என்று குழந்தைகள் கருதுவார்கள்.



    அத்துடன் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும்? என்பது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பிப்பார்கள். அந்த சமயங்களில் அலட்சியமாகவோ, கறாராகவோ பதிலளிக்க கூடாது. உங்களுடைய பள்ளிக்கால குறும்புத்தனத்தையும், பள்ளி கல்வியினால் கிடைக்கும் நன்மைகளையும் சொல்லி புரிய வையுங்கள்.

    பள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுப்பி குழந்தையை பள்ளிக்கு செல்ல பழக்கப்படுத்துவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் குழந்தைக்கும், கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லி கொடுங்கள்.

    குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன்பாக முத்தம் கொடுப்பது, அணைத்துக் கொள்வது, டாட்டா காண்பிப்பது என்று உற்சாகமாக வழி அனுப்பி வையுங்கள். குழந்தை உங்களை விட்டு பிரிந்து பள்ளிக்கூடத்துக்குள் செல்லும் வரை வாசலிலேயே நின்று கொண்டிருக்காதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தை விதைத்து விடும். பிரிவின் துயரத்தை அதிகப்படுத்தி விடும்.
    Next Story
    ×