search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பாராட்டும் ஒரு முட்டுக்கட்டை
    X

    குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பாராட்டும் ஒரு முட்டுக்கட்டை

    குழந்தைகளை உற்சாகப்படுத்த சும்மாவாவது‘ பாராட்டுவது சில பெற்றோர், ஆசிரியர்களின் வழக்கம். ஆனால் இந்த வெற்றுப் பாராட்டால்’ நன்மையை விடத் தீமையே அதிகம் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.
    குழந்தைகளை உற்சாகப்படுத்த சும்மாவாவது‘ பாராட்டுவது சில பெற்றோர், ஆசிரியர்களின் வழக்கம். ஆனால் இந்த வெற்றுப் பாராட்டால்’ நன்மையை விடத் தீமையே அதிகம் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

    நாம் நல்ல எண்ணத்தில் குழந்தைகளைப் பாராட்டினாலும், தகுதியில்லாத நேரத்தில் பாராட்டுவது அவர்களின் சுயமரியாதையைப் பாதிக்கும். ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் நல்லவிதமான பாராட்டுகள், ஒருவர் விரக்தி அடையாமல் தடுக்கும் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.



    ஆனால் ஒருவரைப் பாராட்டிக்கொண்டே இருந்தால், எங்கே தனது வேலையில் பிறர் குறை கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற படபடப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்கிறார்கள். அத்துடன் அது முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போட்டு விடுமாம்.

    இதுதொடர்பாக, 295 அமெரிக்க மாணவர்களும், 2 ஆயிரத்து 780 ஹாங்காங் மாணவர்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

    அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்ப பொருத்தமான பாராட்டைப் பெற்ற மாணவர்களை விட, மிகையான பாராட்டுப் பெற்ற மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவது தெரியவந்தது. தங்களின் இந்தக் கண்டுபிடிப்பு, தகுதியில்லாவிட்டாலும் நன்றாகப் பாராட்டுவது நன்மை புரியும் என்ற பொதுவான கருத்துக்கு எதிராக உள்ளது என்று வியப்புத் தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    Next Story
    ×