search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தை வயதுக்கேற்ற வளர்ச்சியடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள...
    X

    குழந்தை வயதுக்கேற்ற வளர்ச்சியடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள...

    ஒரு குழந்தை வயதுக்கேற்ற வளர்ச்சியடைந்துள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    தங்கள் குழந்தை சரியாக வளர்ச்சியடைகிறதா என்பதை சக வயது குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்வது வழக்கம். ஒரு குழந்தை வயதுக்கேற்ற வளர்ச்சியடைந்துள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? பொதுவான வளர் மைல்கற்கள் இதோ...

    2 மாதம் :  

    பிரகாசமான வண்ணங்களை நோக்கி தலையைத் திருப்பும் பெற்றோரின் குரலை அடையாளம் கண்டு கொள்ளும் கை, காலை சுழற்றி உதைக்கும் பாட்டிலா/மார்பா என அடையாளம் கண்டு கொள்ளும் சத்தத்தையோ/பேச்சையோ கேட்டால் அமைதியாகி விடும்.

    4 மாதம் :

    பேசுவதைப் போல் பாவித்து ஒலி எழுப்பும் பெற்றோர் பேசி விளையாடுகையில் பேச் சின் ஒலியை எழுப்ப முயற்சி செய்யும் நகரும் பொருட்களை தன் கண்களால் பின் தொடரும் தலையை அசையாமல் வைத்துக் கொள்ளும் தெரிந்த மனிதர்கள்/பொருட்களை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டு கொள்ளும் தான் மகிழ்ச்சியாக/சோகமாக இருப்பதை மற்றவருக்கு தெரியப்படுத்தும்.

    6 மாதம் :

    பெயரைக் கூறி அழைத்தால் அதை புரிந்து கொள்ளும் ஒலி வரும் திசையை நோக்கி திரும்பும் பொருட்களை நோக்கி நகர்ந்து எடுத்துக் கொள்ளும் பின்னால் திரும்பி படுக்கையில் தன் பாதத்துடன் விளையாடும் உண்ணும் போது பாட்டிலை பிடித்துக் கொள்ள உதவும் பழகிய முகங்களைத் தெரிந்து கொண்டு, யாரெனும் அந்நியர் எனில் அதை தெரிந்து கொள்ளத் தொடங்கும் பேச்சு மற்றும் ஒலியை பின்பற்ற முயற்சி செய்யும் குப்புறப்படுக்கும்.

    9 மாதம் :

    பிடித்த பொம்மைகளை வைத்திருக்கும் ‘இல்லை’ என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் விரல்களை வைத்துப் பொருட்களை குறிப்பிட்டு காட்டும் அந்நியரைப் பார்த்து பயப்படும் உதவியின்றி உட்கார முடியும் தவழும் மற்றவர்களின் ஒலி மற்றும் சைகைகளை பின்பற்றும்.



    1 வயது :  

    உட்கார்ந்த நிலைக்கு வர முடியும் கொஞ்ச நேரத்துக்கு உதவியின்றி நிற்க முடியும் கப்/தொலைபேசியை வைத்து பெரியவர் கள் போல் பாவிக்கும்‘கண்ணாமூச்சி’ விளையாட்டு விளையாடத் தெரியும். போய் வருகிறேன் (Byebye) என கையசைக்கும் பாத்திரத்தில் பொருட்களைப் போடத் தெரியும் அம்மா, அப்பா ஒலியை ஏற்படுத்தும்.

    18 மாதங்கள் :

    பொருட்களை தள்ள/இழுக்க பிடிக்கும் குறைந்தபட்சம் 6 வார்த்தைகளை சொல்லும் பிறர் சொல்லும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றும் ஷூ, சாக்ஸ், கையுறைகளை பிடித்து இழுக்கத் தெரியும் புத்தகத்தில் உள்ள பெயரை சொன்னால், அதனின் படத்தை சுட்டிக் காட்டும் தானே உண்ணும் கிரயானை (Crayons) வைத்து காகிதத்தில் கோடு போடும் உதவியின்றி நடக்கும்... பின்னோக்கி நடக்கும் தனக்கு வேண்டிய விஷயத்தை சுட்டிக் காட்டும் மற்றும் வார்த்தைகளை பயன்படுத்தி தனக்கு வேண்டிய விஷயத்தை கேட்க முயற்சி செய்யும்.

    2 வயது :

    2 வார்த்தை சொற்றொடர்களை உருவாக்கி பயன்படுத்தும் எண்ணுவதற்கும் அதிகமான வார்த்தைகளை பேசும் பழக்கப்பட்ட படங்களை அடையாளம் கண்டு கொள்ளும் பந்தை முன்னோக்கி உதைக்கும் டீஸ்பூன் உபயோகித்து ஓரளவுக்குத் தானே உண்ணும் அதிகமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் புத்தகத்தை வைத்து விளையாடும் போது அதிலுள்ள பக்கங்களை (இரண்டு/மூன்றாக) திருப்பும் உடம்பின் நடுப்பகுதியை (கண், காது, மூக்கு, வயிறு) சுட்டிக் காட்டி அடையாளம் கண்டு கொள்ளும் பாசத்தை வெளிப்படுத்தும்.



    3 வயது :

    கைகளை மேலே உயர்த்தி பந்தை மேலே வீசும் மூன்று சக்கர வண்டியை ஓட்டும் தானே ஷூ போட்டுக் கொள்ளும் வீட்டின் கதவுகளை திறக்கும் புத்தகத்தை வைத்து விளையாடும் போது, ஒவ்வொரு பக்கங்களாக திருப்பும் பொதுவான ரைம்ஸை (rhymes) மீண்டும் பாடும் பேசும் போது சின்ன வாக்கியங்களை உபயோகிக்கும் ஒரு நிறத்தின் பெயரையாவது சரியாக சொல்லத் தெரியும்

    4 வயது :  

    பேசும் போது சில நேரங்களில் 5-6 வாக்கியங்களை உபயோகிக்கும் கைகளை மேலே உயர்த்தி பந்தை மேலே வீசும் எண்ணுவதின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் மற்றும் சில எண்களையும் தெரிந்திருக்கும் (‘உனக்கு ஒன்றுதான்’ என்றால், அது என்னவென்று புரியும்) ஒருவரை வரைய முயற்சி செய்கையில் குறைந்தது 2 உடல் பாகங்களை வரையத் தெரிந்திருக்கும் கதையை ஞாபகத்தில் வைத்து, அதில் சில பாகங்களையாவது சொல்லத் தெரிந்திருக்கும் நேரத்தைப் பற்றி தெளிவாக புரியத் தொடங்கி இருக்கும் ‘ஒத்த’ மற்றும் ‘வெவ்வேறு’ ஆகியவற்றின் அர்த்தம் அறிந்து கொள்ளும் கற்பனைத் திறன் இருக்கும்; விளையாட்டில் கற்பனைக்கு வடிவம் கொடுக்கத் தெரியும்.

    5 வயது :


    பேசும் போது சில நேரங்களில் 5-6 வாக்கியங்களை உபயோகிக்கும் கற்பனை விளையாட்டு விளையாடும் பாலினம் பற்றி புரியும் (தான் பெண்/ஆண் என புரியும்) 10 அல்லது அதற்கு அதிக பொருட்களை எண்ணத் தெரியும் பெரிய கதைகளை சொல்லத் தெரியும் பெயரையும் முகவரியையும் (சொல்லிக் கொடுத்திருந்தால்), சொல்லத் தெரியும் குதிக்க, ஊஞ்சலாட, ஏற, குட்டிக் கரணம் போடத் தெரியும் ஒருவரை வரையும் போது அதில் இரு பரிமாணத்தில் உடலை வரைந்து இருக்கும் (உடல் வரைய குச்சி போடாமல் வட்டம் போடத் தெரியும்) உதவியின்றி உடையணிய மற்றும் கழற்றத் தெரிந்திருக்கும் ஃபோர்க் (Fork), ஸ்பூன் மற்றும் (சில நேரங்களில்) மேஜைக்கத்தி பயன்படுத்தும். சிறுவயதில் வளர்ச்சியில் தாமதத்துக்கான அறிகுறிகள் இருந்தால், சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கவேண்டும். தவறினால், அக்குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாமலேயே போகலாம்.
    Next Story
    ×