search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உங்கள் குழந்தையோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள்
    X

    உங்கள் குழந்தையோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள்

    குழந்தைகளுடனான விளையாட்டு உங்கள் மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.
    உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளோ, உங்களை மகிழ்விப்பதில் அவர்கள் தவறுவதே இல்லை.

    பெற்றோராக உங்கள் குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று. விளையாட்டு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும்.

    உங்கள் மனச்சோர்வைப் போக்க ஒரு குழந்தையை தோழனாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவோர் அதன் மூலம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிறைய ஏற்படுவதாக நம்புகின்றனர்.

    குழந்தைகளுடன் விளையாடுவது, அது உங்கள் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளோ அல்லது உங்கள் நண்பர்களின் குழந்தைகளோ, உங்களை இளைப்பாறச் செய்யும் (உங்களை ஊக்கம் கொள்ளச் செய்யும்).



    குழந்தைகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியைத் தருவதால் உங்கள் மனம் புத்துணர்ச்சி பெற்று சோர்விலிருந்து விடுபடுவீர்கள்.

    உங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் நீங்கள் பொறுமையையும் புரிதலையும் கற்றுக்கொள்வதால் இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது இருவருக்குமே மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடையே காணப்படும் சமூக மற்றும் உணர்வு சார்ந்த நடத்தைகள் மற்றும் அவர்களிடையே காணப்படும் பந்தம் ஆகியவற்றில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது, அது மனதிற்கு ஆறுதலையும் அமைதியையும் தருவதாகக் கருதப்படுகிறது.

    குழந்தைகளுடனான விளையாட்டு உங்கள் மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது. ஒரே இடத்தில் அசையாமல் இருந்துகொண்டோ அல்லது டிவியை பார்த்துக் கொண்டோ இருப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் இது உதவுகிறது.

    சதுரங்கம் (செஸ்) அல்லது புதிர் போட்டிகளை குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதால் மூளைக்கு சவால் வைத்து சுறுசுறுப்பாக்குகிறது. மேலும் ஞாபக சக்தி தொடர்பான சிக்கல்களையும் சரி செய்கிறது.
    Next Story
    ×