search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைக்கு ஏற்படும் சிரங்கு நோயின் தன்மையைக் குறைக்கும் வழிகள்
    X

    குழந்தைக்கு ஏற்படும் சிரங்கு நோயின் தன்மையைக் குறைக்கும் வழிகள்

    குழந்தையின் தோல் வறண்டு, வெடிப்புற்று, அரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அதனைச் சரிசெய்து குழந்தையின் கஷ்டத்தைப் போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
    எக்ஸிமா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கரப்பான், காளாஞ்சகப்படை, தேமல் என்று நாம் கேள்விப்படும் சில சரும நோய்களுள் எக்ஸிமாவும் ஒன்று. இது சிரங்கு என்று தமிழில் குறிப்பிடப்படும். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. வறண்ட சருமம், சிவந்து தடித்த சருமம், சொறிய சொறிய மேலும் மேலும் சொறியத் தூண்டும் அரிப்பு, இவை தான் எக்ஸிமாவின் அறிகுறிகள்.

    இவ்வாறு குழந்தையின் தோல் வறண்டு, வெடிப்புற்று, அரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அதனைச் சரிசெய்து குழந்தையின் கஷ்டத்தைப் போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

    குழந்தைக்கு எக்ஸிமா உள்ளது என அறிந்தால், தினந்தோறும் குளிப்பாட்ட வேண்டும் என்று அனைத்து குழந்தை தோல் நிபுணர்களும் பரிந்துரைப்பார்கள். அதிலும் தினந்தோறும் நிறைய தடவையோ குழந்தையை குளிப்பாட்டினால், தோலில் ஈரத்தன்மை இருந்து கொண்டே இருக்கும். இதனால், தோல் உலர்ந்தும், வறண்டும் போகாமலும் காக்கப்பட்டு, தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை விரட்டுகிறது.

    வாசனையில்லாத மென்மையான சோப்புகளையோ அல்லது சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தாத சோப்புக்களையோ பயன்படுத்த வேண்டும். குழந்தையை குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு குளிப்பாட்டவும். சருமத்திற்குள் ஈரம் தங்கியிருக்கும் வண்ணம் தட்டிக்கொடுக்க வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசரைத் தடவி விட வேண்டும்.



    சருமத்தின் வறட்சியையும், அரிப்பையும் இதப்படுத்தும் வண்ணம், குழந்தையின் சருமத்தின் மீது மாய்ஸ்சுரைசரை தினமும் இரண்டு முறையேனும் தடவ வேண்டும். வறண்ட சருமம் எக்ஸிமாவை மேலும் மோசமானதாக்கி, வீக்கத்தை அதிகப்படுத்தும். அதிகமான ஈரத்தன்மையுடைய லோஷன்களை விட, அடர்த்தியான மாய்ஸ்சுரைசிங் க்ரீம்கள் குழந்தையின் சருமத்தில் ஊடுருவி எக்ஸிமாவின் தீவிரத்தைக் குறைக்கும்.

    அதிலும் மருத்துவர் அரிப்பு நீக்கும் க்ரீமைப் பரிந்துரைத்தால், அதனை மாய்ஸ்சுரைசரைத் தடவும் முன்பு சருமத்தின் மீது தடவ வேண்டும். காலநிலைக்குத் தக்கவாறு மாய்ஸ்சுரைசரை மாற்ற நினைத்தால், குளிரான காலநிலையில், பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட கிரீம்கள் ஏற்றவை. இந்த க்ரீம்கள், மிகவும் அடர்த்தியாக இருப்பதால், கோடைகாலத்திற்கு ஏற்றவையல்ல. வெப்பமான காலநிலையில், இதனை விட இலேசான க்ரீம்களே தகுந்தவை.

    குழந்தைகள் எக்ஸிமா பாதித்த சருமத்தினைச் சொறிந்து கொண்டு, அரிப்பை நிறுத்த முயற்சிப்பார்கள். இவ்வாறு சொறிந்து கொள்வதை நிறுத்துவதற்காக கைவிரல்களின் மீது அணியப்படும் உறைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது வளர்ந்த குழந்தைகளுக்கும், தளர்நடையினருக்கும் பயன் தராது. ஏனெனில் அவர்களுக்கு இவ்வுறையை அணிவிக்க முடியாது.

    அரிப்பினால் குழந்தைகள் சொறிந்து கொள்வதைத் தடுக்க, அவர்களது கைவிரல் நகங்களை நகவெட்டி மூலம் வெட்டிவிட்டு, நகத்தின் கூர்மையை மழுங்கடித்து விட வேண்டும். குழந்தை வழக்கத்தை விட அதிகமாக சொறிந்து கொள்வதைக் கண்ணுற்றால், உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அரிப்புத் தடுப்பு க்ரீமை பரிந்துரைக்கச் செய்து வாங்கித் தடவவும்.

    Next Story
    ×