search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்
    X

    மாணவர்களே நம்பிக்கையுடன் தேர்வுக்கு செல்லுங்கள்

    தற்போது கிடைக்கிற பொன்னான நேரத்தில் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற முடியும்.
    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8 முதல் 30-ந்தேதி வரையும், பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 31-ந் தேதி வரையும் நடக்கிறது. அரசு பொதுத்தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில், பிளஸ்-2 தேர்வு முடிவு மே 12-ந்தேதியும்,10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ந்தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றால் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

    இதுவரை படிக்காமல் இருந்து விட்டோம். இனிமேல் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியுமா? என்று எந்த நிலையிலும் கருதி விடக்கூடாது. நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். பதற்றத்துடனும், பயத்துடனும் இருப்பது தேர்வை நல்லபடியாக எழுதுவதற்கு எந்த வகையிலும் உதவாது. முடிந்த வரை பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் பாடம் தொடர்பாக தங்களுக்குள் விவாதித்து நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொண்டால், தேர்வு எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    தேர்வுக்காலத்தின் முக்கியத்துவத்தை புரிந்து செயல்பட வேண்டும். கடந்து போன காலத்தை மறந்து, தற்போது கிடைக்கும் நேரத்தை சரியாகவும், முழுமையாகவும் படிப்புக்காக செலவிட வேண்டும். அதிலும் தனக்கு சரியாக படிக்க வராத பாடத்தையும், நன்றாக படிக்க வரும் பாடத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



    நம்பிக்கையை இழக்க செய்யும் வகையில் கூறப்படும் கருத்துகளை பொருட்படுத்த கூடாது. ஒவ்வொரு தேர்வு முடிந்த பிறகும் அடுத்த தேர்வுக்கு உடனே தயாராகி விட வேண்டும். எழுதி முடித்த தேர்வுகளில் செய்து விட்ட தவறுகளை நினைத்து சோர்ந்து விடக் கூடாது. தவம் இருப்பது போல் தேர்வுக் காலத்தில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அமர்ந்து படிக்க வேண்டும். அதன் மூலம் தான் எதிர்காலத்தில் உயர்ந்த இடத்தில் அமரும் நிலைக்கு உயர முடியும்.

    தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அதில் கவனம் செலுத்தி திசைமாறி விடக்கூடாது. படிக்காமல் விட்ட கடந்த காலத்தை மறந்து விட்டு,

    தற்போது கிடைக்கிற பொன்னான நேரத்தில் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற முடியும்.

    மேலும் உயர்கல்வியிலும் முத்திரை பதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நன்றாக படிக்கிற மாணவர்கள் மாநில அளவில் மதிப்பெண் பெற படிக்க வேண்டும். இதன் மூலம் அறிவார்ந்த மாணவ சமூகத்தை பெற முடியும்.
    Next Story
    ×