search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டலாமா?
    X

    குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டலாமா?

    வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது குழந்தையின் வாயை திறந்து வலுக்கட்டாயமான உணவை தொண்டைக்குள் தள்ளுவது ஆகும். இதனால் குழந்தை மிகவும் அவதிப்படும்
    குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடினமான ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு இயல்பு வாய்ந்தவர்கள். அவர்களின் விருப்பம் அறிந்து அவர்களின் போக்கிற்கு சென்று அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளை பாதுகாப்பதும் அவர்களின் உணவுபழக்கத்தை பராமரிப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு குழந்தைக்கு உணவூட்டுவது என்பது மிகவும் கடினமான செயலாகும். அவர்களது வயதின் காரணமாக, பலவித சுவை தரும் உணவுகளை பெரிதும் விரும்புவார்கள். நாட்கள் செல்ல செல்ல குழந்தைக்கு உணவளிப்பது என்பது கடினமாகிக்கொண்டே போகும். எனினும், அவர்கள் விரும்பும் உணவை அவர்களுக்கு ஊட்டிவிடுவதை தவிர வேறு வழி இல்லை. ஒரு சிலர் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுகின்றனர்.

    குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவதின் மூலமாக அவர்கள் உணவை உட்கொள்ளுவதோடு அவர்களுக்கு தேவையான சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைக்கின்றது. இன்னொரு வகையில் அதுபெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது குழந்தையின் வாயை திறந்து வலுக்கட்டாயமான உணவை தொண்டைக்குள் தள்ளுவது ஆகும். இது ஒரு குழந்தை சாப்பிட மறுக்கும் போது செய்யக்கூடிய செயலாகும். சிறு ஸ்பூனை கொண்டு அவர்களுக்கு உணவூட்டலாம். வலுக்கட்டாயமாக உணவளிப்பதால் குழந்தைக்கு உணவு கிடைப்பதோடு அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். எனினும், வலுக்கட்டாயமாக உணவூட்டியதின் விளைவாக சில சந்தர்பங்களில் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்படும் நன்மைகளை பற்றியும் தீமையைப் பாற்றியும் இப்பொழுது படிக்கலாம்.

    உங்கள் குழந்தை வளரும்போது அதன் உணவு பழக்கமும் மெதுவாக வளரத்தொடங்கும். அவளுக்கு பிடித்தமான உணவு பிடிக்காத உணவு என்று சில இருக்கும். அவளை சாப்பிடவைப்பதற்கு அவளுக்கு விருப்பமான உணவையே அளியுங்கள். எனினும், வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது தவறான ஒன்றாகும். குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர்களின் சுவை மற்றும் விருப்பமறிந்து அதற்கு ஏற்றாற்போல் உணவை அளியுங்கள்.

    வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவூட்டுவது என்பது தவறான முடிவில் போய் கொண்டுவிடும். அவர்கள் உணவை சுவைப்பதற்கு பதிலாக அதனை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள் அந்த உணவின் மீது கோபம் கொண்டு அதனை உட்கொள்ளுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள். வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள் உணவை வெறுப்பதால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகின்றது.

    * உணவை வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவூட்டுவதை தவிர்த்து, அவர்களுக்கு உணவை பிடிக்கத்தக்க வகையில் அளிக்க வேண்டும். வண்ணமிகு உணவு வகைகள் செய்து அவர்களின் பசியை தூண்டச் செய்யுங்கள்.

    * அவர்களுக்கு விருப்பமான உணவை சிறிது மாதங்களுக்கு அளித்து மெதுவாக ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளை சாப்பிட வையுங்கள். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது எந்த பலனையும் அளிக்காது. அவர்களது போக்கில் சென்று அவர்களை மாற்ற வேண்டும். நீங்கள் புதிதான உணவை முயற்சி செய்யும் போது சிலவற்றை விரும்பி சாப்பிடுவார்கள் சிலவற்றை அப்படியே விட்டு விடுவார்கள். அதனை பெரிதுபடுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது கடினமான ஒன்றுதான் எனினும், பொறுமையாக இருந்து அவர்களுக்கு அதனை பழக அவகாசம் கொடுக்க வேண்டும்.

    * உங்கள் குழந்தை மெதுவாக சாப்பிடுவதாக நினைத்தால், அவர்களுக்கு ஊட்டிவிடலாம். இது வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதில் ஒரு முறையாகும். சில குழந்தைகள் ஊட்டி விட்டால் தான் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுவார்கள். இது நல்லதல்ல. இதனால் உங்கள் குழந்தை மிகவும் அவதிப்படும். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளித்ததால் சில நேரங்களில் இறப்பு நேரிடும் அபாயம் உள்ளது. அதனால் வலுகட்டாயமாக உணவூட்டும்போது அதிக கவனம் தேவை. குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது ஒரு கலையாகும். அதற்கு சிறிது தந்திரமும் பொறுமையும் தேவைப்படும். அதனை கையாண்டு பெருமையான அம்மாவாக திகழுங்கள்.
    Next Story
    ×