search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அழும் குழந்தையை எப்படி சமாதானம் செய்யலாம்
    X

    அழும் குழந்தையை எப்படி சமாதானம் செய்யலாம்

    குழந்தை அழுதால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். உங்கள் குழந்தை அழத்தொடங்கினால் என்ன செய்யலாம் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
    குழந்தை அழுதால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். விடாது தொடர்ந்து அழுதால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மற்றபடி வயிற்று வலியாலும், அசௌகரியமான சூழ்நிலையாலும் குழந்தை அழலாம். இதற்கு பயப்படத் தேவையில்லை.

    பொதுவாக குழந்தைகள் பசியாயிருந்தால், உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, சோர்வடைந்தாலோ கூட அழுவார்கள். அப்படி உங்கள் குழந்தை அழத்தொடங்கினால் என்ன செய்யலாம் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

    சில நேரங்களில் குழந்தைக்கு பசித்தால் அவர்கள் அழுவார்கள். எனவே உணவு வேளைகளில் அவர்கள் அழுதால் அவர்களுக்கு உணவளியுங்கள்.

    உங்கள் குழந்தை விரல் சூப்பினால் அந்த பழக்கத்திலிருந்து விடுவிக்கச் செய்யுங்கள். விரல் சூப்புவதை நிறுத்தும்போது அழுதால் அவர்களுக்கு மாற்றாக பால் பாட்டிலை தந்து பாருங்கள்.

    சில நேரங்களில் தனிமையில் இருப்பதாக உணர்ந்தாலும் குழந்தைகள் அழும். அப்படியானால் அவர்களை கட்டி அரவணைத்து அவர்கள் பாதுகாப்பை உணருமாறு செய்யுங்கள்.

    சில சமயங்களில் குழந்தையை வெளியில் அழைத்து செல்வதும் அழுகையை நிறுத்த உதவும். அவர்களுக்கு பொழுபோக்கில்லாதபோது அவர்கள் அழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அவர்களை மெல்ல தூக்கிக் கொண்டு வெளியில் சென்று ஒரு நடை நடந்துவிட்டு வாருங்கள்.

    அழும் குழந்தையை சமாளித்து அவர்கள் கவனத்தை திருப்ப பொம்மைகளும் உதவும். அதனால் எப்போதும் பொம்மைகளை கைவசம் வைத்திருங்கள்.

    சில நேரங்களில் வானிலையும் அவர்கள் அழுவதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தை உள்ள அறை மிகுந்த சூடாகவோ அல்லது மிகுந்த குளிராகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மேற்கூறப்பட்ட எதுவும் பயன் தர வில்லையென்றால் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். செரிமானக் கோளாறுகளும் குழந்தையை சிலநேரங்களில் அழவைக்கும்.
    Next Story
    ×