search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆட்டிசத்தை பெற்றோர் குணப்படுத்தலாம்
    X

    ஆட்டிசத்தை பெற்றோர் குணப்படுத்தலாம்

    பெற்றோர் ஆட்டிசம் குழந்தைகளுடன் உரையாடும் விதத்தின் மூலம், அவர்களின் குறைபாடு அறிகுறிகளின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்கலாம்
    ‘ஆட்டிசம்’ எனப்படும் கற்றல் குறைபாட்டுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர், பயிற்சி பெற்றுச் செயல்படுவதன் மூலம் அந்தக் குறைபாட்டை குறிப்பிட்ட அளவு குறைக்க முடியும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளின் இரண்டரை வயது முதல் பெற்றோர் அவர்களிடம் உரையாடும் விதத்தின் மூலம், அவர்களின் குறைபாடு அறிகுறிகளின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்கலாம் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வு கூறுகிறது.

    மிதமானது முதல் கடுமையான ஆட்டிசக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்வது, அவர்களின் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    கற்றல் குறைபாடு, குறிப்பிட்ட குழந்தைகள் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு மிகவும் சிரமமாக உள்ள ஒரு நிலையாக கருதப்படுகிறது.

    இதற்கு, வழக்கமான சிகிச்சை முறைகளைக் காட்டிலும், ஆராய்ச்சியாளர்கள் கற்றுக்கொடுத்த சிகிச்சை முறைகளைப் பின்பற்றிய போது, கடுமையான ஆட்டிச அறிகுறிகள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 15 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.

    இந்தக் கண்டுபிடிப்பு, கற்றல் குறைபாட்டுத் திறன் குழந்தைகளுக்கான இயல்பு முயற்சியில் புதிய வெளிச்சமாகப் பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×