search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை உதட்டில் முத்தமிட கூடாது - ஏன் தெரியுமா?
    X

    குழந்தைகளை உதட்டில் முத்தமிட கூடாது - ஏன் தெரியுமா?

    குழந்தைகளை உதட்டில் முத்தமிட கூடாது என பெரியவர்கள் கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
    பிறந்த குழந்தைகளை பிடிக்காது என சொல்வோர் யாரும் இருக்க முடியாது. குழந்தையை தூக்க வேண்டும், கொஞ்ச வேண்டும், முத்தமிட வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். நம் வீட்டு பெரியவர்கள் குழந்தைகளை முத்தமிட வேண்டாம் என அதட்டுவார்கள். அதற்கு பின்னணியில் மிகு முக்கியமான காரணம் இருக்கிறது. அது என்னவென்று கீழே பார்க்கலாம்.

    குழந்தைகளை இதழ்களில் முத்தமிடுவது மிகவும் தவறான செயல். ஏனெனில், மக்களிடம் 85% பாக்டீரியாக்கள் இதழ் / வாய் மூலமாக தான் பரவுகிறது. இதனால், குழந்தையின் நலன் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உண்டானால், அது முதலில் கல்லீரல் மற்றும் மூளையை தான் வெகுவாக பாதிக்கும். எனவே, குழந்தைகளை இதழ்களில் முத்தமிடுவதை தவிர்ப்பது அவசியம்.

    பிறந்த மூன்று மாதங்களில் குழந்தைகளால், கிருமிகளை எதிர்த்து போராட முடியாது. அதற்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.
    அபாயகரமான வைரஸ் தொற்று உள்ள நபர்கள் சுத்தமாக குழந்தைகளை முத்தமிடக் கூடாது. இது குழந்தைகள் இறக்க கூட காரணமாக அமையலாம்.

    காய்ச்சல் போன்ற இதர நோய் தொற்று உள்ளவர்களும் குழந்தைகளை முத்தமிடுவது தவிர்க்கவும். இது முழுக்க, முழுக்க குழந்தையின் ஆரோக்கியத்திற்காக கூறப்படுவது.
    Next Story
    ×