search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான ஜவ்வரிசி - உருளைக்கிழங்கு ரொட்டி
    X

    சத்தான சுவையான ஜவ்வரிசி - உருளைக்கிழங்கு ரொட்டி

    ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். நோய் வாய்ப்பட்டவர்களுக்கு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 1 கப்
    உருளைக்கிழங்கு - 4
    பச்சை மிளகாய் விழுது - 1டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    செய்முறை :

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசியை தண்ணீரை வடித்து போடவும். அதனுடம் ப.மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீரகத்தூள், கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். அனைத்து நன்றாக கலந்து மாவு பதம் போல் வரும்.



    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சிறிது மாவை கல்லில் போட்டு சப்பாத்தி போல் மெலிதாக தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான சத்தான ஜவ்வரிசி ரொட்டி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×