search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு
    X

    குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு

    டிரை ஃப்ரூட்டில் நிறைய சத்துக்கள் உள்ளன. சில குழந்தைகள் டிரை ஃப்ரூட் சாப்பிடாது. அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    உலர்ந்த அத்திப்பழம் (fig) - 10
    ​பேரீச்சம்பழம் - 12
    பாதாம் - 12
    முந்திரி - 12
    பிஸ்தா - 12
    ​தேன் - 2 ​தேக்கரண்டி
    ​நெய் - 2 தேக்கரண்டி
    ​​வெள்​ளை எள்ளு - 1 ​மே​ஜைக்கரண்டி

    செய்மு​றை :

    * உலர்ந்த அத்திப்பழத்​தை ​வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற ​வைக்கவும். அது முழு​மையாக ​வெந்நீரில் மூழ்கியிருக்க ​வேண்டும்.

    * வாணலி​யை அடுப்பில் ​வைத்து மிதமான தீயில் எள்ளு ​லேசாக ​வெடிக்கும் வ​ரை வறுக்கவும்.

    * பிறகு அதே வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா இ​வைக​ளையும் வறுத்து ஆற வைக்கவும்.

    * இம்மூன்றும் ஆறிய பிறகு மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். மாவாக அரைக்காமல் ​கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஊறிய அத்திப்பழத்​தை மிக்ஸியில் நன்றாக அ​ரைத்துக்​கொள்ளவும்.

    ​* பேரீச்சம்பழத்​தை ​மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

    * பிறகு வாணலியில் ​நெய் விட்டு அ​ரைத்த அத்திப்பழத்​தையும், பேரீச்சம்பழத்​தையும் ​சேர்த்து நன்றாக கலக்கவும். அ​வையிரண்டும் நன்றாக ஒன்று​ சேர ​வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும்.

    * 3 நிமிடங்கள் கிளறிய பின் ​பொடித்து ​வைத்துள்ள பருப்புக​ள் மற்றும் ​தேன் சேர்த்து நன்றாக கிளறவும்.

    * அடுப்​பை அ​ணைத்துவிட்டு ​சற்று சூடாக இருக்கும் போதே கைகளில் ​கொஞ்சம் ​நெய் தடவிக்​கொண்டு இந்தக் கல​வை​யை லட்டுகளாக உருட்டி பிடிக்கவும்.

    * உருட்டிய லட்டுக​ளை வறுத்த எள்ளின் மீது உருட்டி எடுத்து ​வைக்கவும்.

    * எள் ​சேர்க்க விரும்பாதவர்கள் லட்டுக​ளை அப்படி​யேவும் சாப்பிடலாம்.

    * சத்துகள் நி​றைந்த சர்க்க​​ரை ​சேர்க்காத இனிப்பு இது. குழந்தைகளுக்கு மிகவும் சத்து நிறைந்தது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×