search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    பூதலிங்கசாமி கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    பூதப்பாண்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பூதப்பாண்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 31-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நேற்று அதிகாலையில் கணபதிஹோமம், அபிஷேக ஆராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு சாமியும், அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு போன்றவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமியும், அம்பாளும் வாகன பவனி வருதல், சமய சொற்பொழிவு, தீபாராதனை, இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.

    வருகிற 30-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக தேர்களில் விநாயகரையும், சாமியையும், அம்பாளையும் எழுந்தருளச்செய்தலும், அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசை நிகழ்ச்சியும், 10 மணிக்கு சப்தாவர்ணமும் நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 31-ந் தேதி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 9 மணிக்கு ஆறாட்டு விழாவும், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 10 மணிக்கு தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×