search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாமக்கல் ஆஞ்சநேயர் சிறப்பு தகவல்கள்
    X

    நாமக்கல் ஆஞ்சநேயர் சிறப்பு தகவல்கள்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. வருடந்தோறும் அனுமன் பிறந்த மூல நட்சத்திர நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்படுகிறது. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அவர் சார்பில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான செலவை ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டார்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 2009-ம் ஆண்டு நடந்தது. ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு 2018-ம் ஆண்டிற்கான வடை மாலை சாத்துவதற்கான முன்பதிவு கோவில் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு (2018) ஜூன் மாதம் வரை வடை மாலை சாத்துவதற்கான பதிவு முடிந்து விட்டது. ஜூலை மாதத்திற்கு பிறகு வடை மாலை சாத்த ஒரு சில நாட்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து பக்தர்கள் வடை மாலை சாத்த பணம் கட்டி பதிவு செய்து வருகிறார்கள்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு. தங்கத் தேர் இழுக்க ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பணம் கட்டியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மாலை 6.30 மணிக்கு தங்கத் தேரை இழுக்கலாம்.

    ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. முதலில் வடை மாலை சாத்தப்படுகிறது. அதன்பிறகு ஆஞ்சநேயருக்கு முதலில் நல்லெண்ணை காப்பு செய்யப்படுகிறது. பிறகு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சொர்ண அபிஷேகம் ஆகிய அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது. அதன்பிறகு உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.


    தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷே கங்கள் நடத்தப்படுகிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருட திருவிழா பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதம் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில் 3 திருத்தேர்கள் திருவீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது. நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்பகுதியில் வினாயகருக்கு தனி சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே, கோவிலுக்குள் நுழையும் வாசலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.

    18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், தைரியம், வலிமை, பயமின்மை, ஞாபக சக்தி, சுறுசுறுப்பு, விடா முயற்சி, நல்ல ஒழுக்கம், அடக்கம், நேர்மை, நோயின்மை, தேர்ச்சி பெறுதல், உண்மை பேசுதல், நாவன்மை, புகழ், நற்பண்புகள் ஆகியவற்றை வழங்குகிறார்.
    Next Story
    ×