search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தைத்திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தைத்திருவிழா நாளை தொடங்குகிறது

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தைத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்கள் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழா வருகிற 29-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை காலை 6 மணிக்கு திருக்கொடி பட்டம் பிரகார வலம் வருதல் தொடர்ந்து கொடி ஏற்றுதல் போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார். பையன் ராஜன் முன்னிலை வகிக்கிறார். சுவாமி கொடியேற்றி வைக்கிறார்.

    பின்னர், பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் பணிவிடையும், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் பணிவிடை, உகப்படிப்பு, வாகன பவனி, இரவு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    20-ந் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 21-ந் தேதி இரவு அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாற்றி வீதிவலம் வரும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி மாலையில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    23-ந் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பரவாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 24-ந் தேதி சர்ப்ப வாகனத்திலும், 25-ந் தேதி கருட வாகனத்திலும் அய்யா எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    26-ந் தேதி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணறு சமீபம் கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி அனுமார் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 28-ந் தேதி இந்திர விமானம் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 29-ந் தேதி பகல் 12 மணிக்கு அய்யா பல்லாக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.
    Next Story
    ×