search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரியன் பகவான் தொடர்பான முக்கிய தகவல்கள்
    X

    சூரியன் பகவான் தொடர்பான முக்கிய தகவல்கள்

    காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. சூரியன் தொடர்பான முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    பிரபஞ்சத்தில் சூரியன் மிகவும் இளையவர் என்று கருதப்படுகிறது. சூரியனை ஆத்மகாரகன், பித்ரு (தந்தை) காரகன் என்று சொல்கிறார்கள். ஒரு ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம். சூரியனைக் கொண்டு அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சூரிய தசை வரும். சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 6 வருடம் முழுமையாக வரும். சூரியன் தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:-

    ஆட்சி பெறும் ராசி - சிம்மம்
    உச்சம் பெறும் ராசி  - மேஷம்
    நீச்சம் பெறும் ராசி - துலாம்
    நட்பு பெறும் ராசிகள் - விருச்சிகம், தனுசு,  மீனம்
    சமராசிகள் - மிதுனம், கடகம், கன்னி
    பகை பெறும் ராசிகள்- ரிஷபம், மகரம், கும்பம்
    மூலத்திரிகோணம் - சிம்மம்
    சொந்த நட்சத்திரம் - கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
    திசை - கிழக்கு
    அதிதேவதை - அக்னி, சிவன்
    ஜாதி - ஷத்திரியன்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - மயில், ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
    தானியம் - கோதுமை
    மலர் - செந்தாமரை
    ஆடை - சிவப்பு நிற ஆடை
    ரத்தினம் - மாணிக்கம்
    நிவேதனம்- சர்க்கரைப் பொங்கல்
    செடி/விருட்சம்
    - வெள்ளெருக்கு
    உலோகம்- தாமிரம்
    இனம் - ஆண்
    அங்கம் - தலை, எலும்பு
    நட்பு கிரகங்கள் - குரு, சந்திரன்
    பகை கிரகங்கள் - சுக்கிரன், சனி
    சுவை - காரம்
    பஞ்ச பூதம்- நெருப்பு
    நாடி - பித்த நாடி
    மணம் - சந்தன வாசனை
    வடிவம் - சம உயரம்
    சூரியனுக்குரிய 
    கோவில் - சூரியனார் கோயில், ஆடுதுறை, தஞ்சாவூர் (தமிழ்நாடு) கோனார்க் (ஒரிசா)
    திதி - சப்தமி
    கிழமை - ஞாயிறு
    ஓரை - சூரிய ஹோரை
    பிரத்யதி தேவதை - ருத்திரன்

    சூரியனின் - அம்சங்கள்

    கிழமை: ஞாயிறு
    தேதிகள்: 1, 10, 19, 28
    நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
    தமிழ் மாதம் : சித்திரை, ஆவணி
    ராசி : மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
    நிறம் : சிவப்பு
    ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
    தானியம்: கோதுமை
    ஆடை (வஸ்திரம்): சிவப்பு.

    லக்னமும்  யோகமும்

    எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?

    மேஷ லக்னம்/ராசி-:- பெரிய பதவி
    ரிஷப லக்னம்/ராசி-: மாபெரும் யோகம்
    கடக லக்னம்/ராசி- : பேச்சாற்றலால் யோகம்
    சிம்ம லக்னம்/ராசி- :  அதிகார ஆளுமை
    விருச்சிக லக்னம்/ராசி : தலைமைப் பதவி
    தனுசு லக்னம்/ராசி- : நல் பாக்ய யோகம்
    மற்ற லக்னம்/ராசிகள் - சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம் கிடைக்கும்.

    சூரியனின் பீஜ மந்திரங்கள் ஆறு

    1. ஹ்ராம்
    2. ஹ்ரீம்
    3. ஹ்ரூம்
    4. ஹ்ரைம்
    5. ஹ்ரௌம்
    6. ஹ்ர

    Next Story
    ×