search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலையில் 2018-ம் ஆண்டில் கிரிவலம் செல்லும் நாட்கள்
    X

    திருவண்ணாமலையில் 2018-ம் ஆண்டில் கிரிவலம் செல்லும் நாட்கள்

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2018-ம் ஆண்டில் கிரிவலம் செல்லும் நாட்கள் என்னவென்று பார்க்கலாம்.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்த புத்தாண்டு கிரிவலத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு மொத்தம் 13 பவுர்ணமி வருகிறது.

    2018-ம் ஆண்டின் கிரிவல நாட்கள் விவரம் வருமாறு:-

    ஜனவரி 1-ந்தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணி முதல் 2-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை.

    ஜனவரி 30-ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.36 மணி முதல் 31-ந்தேதி புதன்கிழமை இரவு 7.26 மணி வரை.

    மார்ச் மாதம் 1-ந்தேதி வியாழக்கிழமை காலை 8.13 மணி முதல் 2-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி வரை.

    மார்ச் 30-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.16 மணி முதல் 31-ந்தேதி சனிக்கிழமை மாலை 6.19 மணி வரை.

    ஏப்ரல் 29-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.05 மணி முதல் 30-ந்தேதி திங்கட்கிழமை காலை 6.50 மணி வரை.

    மே மாதம் 28-ந்தேதி திங்கட்கிழமை இரவு 7.37 மணி முதல் 29-ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி வரை.

    ஜூன் மாதம் 27-ந்தேதி புதன்கிழமை காலை 9.35 மணி முதல் 28-ந்தேதி வியாழக்கிழமை காலை 10.20 மணி வரை.

    ஜூலை மாதம் 26-ந்தேதி வியாழக்கிழமை இரவு 12.20 மணி முதல் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 2.25 மணி வரை.

    ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி சனிக்கிழமை மாலை 4.05 முதல் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணி வரை.

    செப்டம்பர் மாதம் 24-ந்தேதி திங்கட்கிழமை காலை 8.02 மணி முதல் 25-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணி வரை.

    அக்டோபர் மாதம் 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணி முதல் 24-ந்தேதி புதன்கிழமை இரவு 10.50 மணி வரை.

    நவம்பர் மாதம் 22-ந்தேதி வியாழக்கிழமை பகல் 12.45 மணி முதல் 23-ந்தேதி வெள்ளிக்கிழமை பகல் 12.02 மணி வரை.

    டிசம்பர் மாதம் 22-ந்தேதி சனிக்கிழமை காலை 10.45 மணி முதல் 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×