search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரங்கா... ரங்கா... கோஷம்
    X

    ரங்கா... ரங்கா... கோஷம்

    ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதர் பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தரும் போது ங்கா... ரங்கா... என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கும்.
    ஸ்ரீரங்கத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு பரமபத வாசலை கடக்க ரங்கநாதர் புறப்பட்டு வருவார்.

    அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படும். இதற்கு அரங்கன் மூலஸ்தானத்துக்கு மீண்டும் எழுந்தருளும்வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறார் என்று அர்த்தமாகும். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகும்.

    நாழி கேட்டால் வாசல், கொடிமரம் கடந்து திரை மண்டபம் வந்து வேதங்களை கேட்டுக் கொண்டே ரங்கநாதர் பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருள்வார். பரமபத வாசலின் மணிகள் ஒலிக்க, கதவுகள் திறந்து கொள்ளும்.

    ரங்கா... ரங்கா... என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கும். ரங்கநாதர் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிப்பார்.

    பிறகு அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம் வருவார். தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார். மீண்டும் அரையர் சேவை நடைபெறும். நள்ளிரவு வரை ரங்கநாதர் அங்கேயே வீற்றிருப்பார்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும்தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஸ்ரீரங்கத்தில் பரமபத வாசல் திறந்திருக்கும்.
    Next Story
    ×