search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காளமேகப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு 17-ந்தேதி சுதர்சன ஹோமம்
    X

    காளமேகப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு 17-ந்தேதி சுதர்சன ஹோமம்

    மதுரை காளமேகப் பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
    மதுரை ஒத்தக்கடை அருகே காளமேகப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுதர்சன ஹோம 29-வது ஆண்டு விழா வருகிற 17-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 17-ந்தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, புண்யாக வாஸனம், கும்ப பூஜை நடக்கிறது. 10½ மணிக்கு சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுதர்சன ஹோமம் நடக்கிறது. இதைதொடர்ந்து மதியம் 2 மணிக்கு பூர்ணாகுதி, அலங்கார திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு திருவாராதனம், கோஷ்டி வகையறா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை விழா குழுவை சேர்ந்த சூரியமூர்த்தி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர். 
    Next Story
    ×