search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைத்தியநாத சாமி கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    X
    வைத்தியநாத சாமி கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    வைத்தியநாத சாமி கோவிலில் சாப்பிட்ட இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சாமி கோவிலில் சாப்பிட்ட இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சாமிகோவிலில் கார்த்திகைமாத தேய்பிறை அஷ்டமி மகாதேவ அஸ்டமியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தில் சிவபெருமானும் பங்கேற்று உணவு அருந்துவார் என்பது ஐதீகமாகும்.

    இதன்படி நேற்று மகாதேவ அஸ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது சாதம் குவித்துவைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். அதன்பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    உடல்நலக்குறைவால் அவதிப்படுவோர் இங்கு சாமிதரிசனம் செய்தால் குணமடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் இங்கு சிவபெருமான் வைத்தியநாதராக அருள் பாலிக்கின்றார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மகாதேவ அஸ்டமியன்று பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதன்படி நேற்றும் ஏராளமான பக்தர்கள் இலையில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ஏற்பாடுகளை மகாதேவ அஷ்டமிவிழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    ஏழாயிரம்பண்ணை நடுச்சத்திரத்தில் நூற்றாண்டு பழமையான காசிவிஸ்வநாதர் சமேத அன்னபூரணியம்மன் கோவில் உள்ளது. இங்கு அஷ்டமியையொட்டி சிறப்பு யாக பூஜையும் தொழில், கல்வி வளர்ச்சி வேண்டி சிறப்பு வழிபாடும் நடந்தது. சாமிக்கு 21 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×