search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம்

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
    தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

    திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி அடுத்த ஆண்டு(ஜனவரி) மாதம் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கி 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    6-ந் தேதி(சனிக்கிழமை) 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு திருவையாறில் பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. தியாகபிரம்ம மகோற்சவ சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் பந்தக்கால் நட்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் சுரேஷ்மூப்பனார், பொருளாளர் கணேஷ், அறங்காவலர்கள் டெக்கான்மூர்த்தி, எம்.ஆர்.பஞ்சநதம், சீனிவாசன், வக்கீல் கணேசன், உதவிசெயலாளர்கள் பருத்திக்குடி ரவிச்சந்திரன், தஞ்சை கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஜனவரி 2-ந் தேதி நடக்கும் தியாகராஜர் ஆராதனை தொடக்க விழாவில் ஜி.ஆர்.மூப்பனார், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் ஆலோசனைப்படி அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், டெக்கான்மூர்த்தி, சீனிவாசன், சுந்தரம், செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ், உதவிச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழு கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×