search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது
    X

    பழனி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது

    பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் திருக்கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 26-ந் தேதி மாலை சாயரட்சை பூஜையில் காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடக்கும் இந்த

    விழாவில் தினசரி மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, 6.45 மணிக்கு சின்னக்குமாரர்

    தங்க சப்பரத்தில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    6-ம் நாளான அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அடுத்த நாள் மலைக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும்

    நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதால் டிசம்பர் 2-ந்

    தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×