search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா 23-ந்தேதி நடக்கிறது
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா 23-ந்தேதி நடக்கிறது

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி திருக்கார்த்திகை திருநாள் நடக்கிறது. அன்று இரவு 8.30 மணிக்கு கோவிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக அன்று காலை 8 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் கார்த்திகை கோபுரவாயில் முன்பு 20 அடி உயர தென்னை மரத்தில் 15 அடி சுற்றளவுடன் பனை மட்டைகளால் வேயப்பட்ட சொக்கப்பனையில் நம்பெருமாளிடம் இருந்து பந்தத்தில் தீபம் ஏற்றி வைக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சொக்கப்பனை நிகழ்ச்சியை தரிசிப்பதன் மூலம் இருள் நீங்கி பிரகாசமான வாழ்வு அமைய பெறுவது இத்திருநாளின் சிறப்பு அம்சமாகும்.

    அதன்படி அன்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. 8 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்தல் நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு 2-ம் புறப்பாடும் நடக்கிறது. பின்னர் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நடக்கிறது. அன்று மாலை 4.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. திருக்கார்த்திகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் மகர லக்கனத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது.
    Next Story
    ×