search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜென் கதை: இன்று என்பதே நிஜம்
    X

    ஜென் கதை: இன்று என்பதே நிஜம்

    இன்று என்பது மட்டுமே நிஜம், நாளை என்பது மாயை என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    ஒரு முறை ஜென் துறவி தனது சீடர்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார். “இன்று என்பது மட்டுமே நிஜம், நாளை என்பது மாயை. அதனால் எந்த ஒரு காரியத்தையும் நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல், இப்பொழுதே செய்துவிட வேண்டும். அதேசமயம் நாளை நடக்க இருப்பதை நினைத்து, இன்றைய பொழுதை இழந்துவிடக் கூடாது” என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு போர்வீரன், துறவியின் கூற்றை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

    பின்பு ஒரு நாள் அந்த போர் வீரன் தனது எதிரிகளால் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அன்றிரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை. ஏனெனில், அடுத்த நாள் நடக்க இருக்கும் சித்தரவதைகளை பற்றி யோசித்து கொண்டிருந்ததால் அவனது தூக்கம் கலைந்தது.



    சிறையில் இருந்த ஜன்னல் கம்பியை வளைத்து கூர் கம்பியாக மாற்றினான். அதை வைத்து தற்கொலை செய்து கொள்வது அவனது எண்ணமாக இருந்தது. அப்போதுதான் ஜென் துறவியின் அறிவுரைகள் நினைவுக்கு வந்தன.

    “நாளை என்பது மாயை, இன்று என்பது மட்டுமே நிஜம்” என்ற ஜென் துறவியின் கூற்றை மனதில் கொண்டு நிம்மதியாக உறங்கினான். மறுநாள் பொழுதும் விடிந்தது. அதிசயம் நிகழ்ந்ததை போன்று, போர்வீரனை அவனது நண்பர்கள் காப்பாற்றினர்.
    Next Story
    ×