search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக சண்முகர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளியபோது எடுத்தபடம்.
    X
    கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக சண்முகர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளியபோது எடுத்தபடம்.

    சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

    ஆறுபடை வீடுகளில் 4-வது படைவீடான சுவாமிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா தொடங்கியது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதசாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-வது படைவீடாக கருதப்படுகிறது. சிவபெருமானுக்கு ‘ஓம்’ எனும் மந்திரத்தை உபதேசம் செய்த தலமாக வழிபடப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது.

    விழாவின் தொடக்கமாக நேற்று மலை கோவிலில் இருந்து வள்ளி-தெய்வானையுடன் சண்முகர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். முன்னதாக நேற்றுமுன்தினம் விக்னேஸ்வர பூஜை நடந்தது. விழாவில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை சாமி வீதி உலா நடக்கிறது.



    வருகிற 25-ந் தேதி மாலை 6 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நடக்கிறது. முன்னதாக காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 5 மணிக்கு சண்முகர் அம்மனிடம் சக்திவேல் வாங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    சூரசம்காரத்தை தொடர்ந்து சண்முகர் தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 26-ந் தேதி காவிரியில் தீர்த்தவாரியும், திருக்கல்யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×