search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய் தீர்க்கும் திருச்செந்தூர் இலை விபூதி
    X

    நோய் தீர்க்கும் திருச்செந்தூர் இலை விபூதி

    திருச்செந்தூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக்கொள்ள சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள்.
    திருச்செந்தூர் கோவிலில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக்கொள்ள சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்து தொடாமல் போடுவார்கள்.

    விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.

    வேதங்களே பன்னீர் இலைகள் என்பது ஐதீகம். முருகன்பெருமானே உன்னுடைய இலை விபூதிப் பிரசாத மகிமையை எப்படி எடுத்துரைப்பது? வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகளும், பூத, பிரேத, பசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசிக்கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே என்கிறது ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தில் உள்ள ஒரு சுலோகம்.
    Next Story
    ×