search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு காலத்தை எளிதாக கணக்கிடுவது எப்படி?
    X

    ராகு காலத்தை எளிதாக கணக்கிடுவது எப்படி?

    ராகு காலத்தை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்க ஒரு பாடல் வரி இருக்கிறது... அந்த பாடலை வைத்து ராகு காலத்தை கணக்கிடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    ராகு காலத்தை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்க ஒரு பாடல் வரி இருக்கிறது... திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?

    திருவிழா - திங்கள், சந்தை - சனிக்கிழமை, வெளி - வெள்ளி, புகுந்து - புதன், விளையாட - வியாழன், செல்வது - செவ்வாய், ஞாயமா - ஞாயிறு...

    இப்படி அந்த வார்த்தையின் முதல் எழுத்தைக்கொண்டு கிழமையை யூகித்து வரிசைப்படி ஒன்றரை மணி நேரம் கணக்கிட்டு கூட்டி பாருங்க விடை கிடைக்கும்..

    ஞாயிறு = 04.30 - 06.00

    திங்கள் = 7.30 - 9.00

    செவ்வாய் = 03.00 - 04.30

    புதன் = 12.00 - 01.30

    வியாழன் = 01.30 - 03.00

    வெள்ளி = 10.30 - 12.00

    சனி = 09.00 - 10.30
    Next Story
    ×