search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் லட்சார்ச்சனை நாளை நடக்கிறது
    X

    குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் லட்சார்ச்சனை நாளை நடக்கிறது

    குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நாளை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நாளை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாகர்கோவில் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனபெருமாள் கோவில் மற்றும் நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலிலும் லட்சார்ச்சனை நடக்கிறது.

    இதையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும், 9 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும், தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் மேலாளர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×