search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்த சஷ்டி விழா 20-ந்தேதி தொடங்குகிறது: கந்தகோட்டத்தில் 25-ந்தேதி சூரசம்ஹாரம்
    X

    கந்த சஷ்டி விழா 20-ந்தேதி தொடங்குகிறது: கந்தகோட்டத்தில் 25-ந்தேதி சூரசம்ஹாரம்

    சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 20-ந்தேதி தொடங்குகிறது. 25-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
    சென்னை பாரிமுனை ராசப்ப செட்டி தெருவில் அமைந்துள்ளது கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி தேவஸ்தானம். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி கோடி அர்ச்சனை பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    90-வது ஆண்டு கந்த சஷ்டி கோடி அர்ச்சனை பெருவிழா 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த நாட்களில் மூலவர், உற்சவர், தண்டாயுதபாணி, ஆறுமுகர் ஆகிய 4 சன்னதிகளில் தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற உள்ளது.

    விழா நடைபெறும் நாட்களில் முத்துக்குமரன் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. 25-ந்தேதி சஷ்டி நாளில் சிறப்பு பூஜைகளும், கோடி அர்ச்சனையும் காலை முதல் மதியம் வரை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு பிரத்யேக புஷ்ப அலங்காரத்துடன் முத்துக்குமாரன் பவனி வந்து சூரனை சம்ஹாரம் செய்யும் விழா நடக்கிறது.

    26-ந்தேதி காலை 10.15 மணி அளவில் மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சாக மூர்த்தி முத்துக்குமாரசாமிக்கு 108 பன்னீர் அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இரவு 8 மணிக்கு மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி திருவீதி உலா நடக்கிறது.

    இந்த தகவல் கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×