search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முதல்நாடு கிராமத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் விருந்து நடந்தபோது எடுத்தபடம்.
    X
    முதல்நாடு கிராமத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழாவில் விருந்து நடந்தபோது எடுத்தபடம்.

    கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா

    கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா இரவு தொடங்கி விடியவிடிய நடந்தது.
    கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இங்கு புதுக்குளம் செல்லும் வழியில் உள்ள கண்மாய் பகுதியில் எல்லைபிடாரி அம்மன் கோவில் வெட்டவெளியில் பீடத்துடன் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசிமாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது.

    மழை பெய்ய வேண்டியும், நோய் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தலைமுறை, தலைமுறையாக கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழாவுக்காக நேற்றுமுன்தினம் இரவு கோவில் முன்பு கிராம ஆண்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் திரண்டு ஒன்று கூடினர்.பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. பின்னர் காணிக்கையாக, நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஏராளமான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.

    பிறகு ஆட்டுகறி, சோறு சமைக்கப்பட்டு பனை ஓலையில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பனை ஓலையிலேயே விருந்து சாப்பிடவேண்டும். எக்காரணம் கொண்டும் ஆட்டுகறி, சோறு, பூஜை பொருட்களை வீட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விடியவிடிய நடந்த இந்த திருவிழாவில் முதல்நாடு கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என ஆண்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×