search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த திவ்யதேசங்கள்
    X

    பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த திவ்யதேசங்கள்

    வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர். பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த திவ்யதேசங்கள் அறிந்து கொள்ளலாம்.
    வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர். பகவான் திருமாலின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று பெயர் வைத்தார்கள்.

    கி பி 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் இந்தப் பன்னிரு ஆழ்வார்களும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களை (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது .

    1 . பொய்கையாழ்வார் - காஞ்சி.
    2 . பூதத்தாழ்வார் - திருக்கடன் மலை.
    3 . பேயாழ்வார் - மயிலை.
    4 . திருமழிசையாழ்வார் - திருமழிசை.
    5 . நம்மாழ்வார் - திருக்குருகூர்.

    6 . மதுரகவியாழ்வார் - திருக்கோளூர்.
    7 . குலசேகராழ்வார் - திருவஞ்சிக்களம் .
    8 . பெரியாழ்வார் - ஸ்ரீவில்லிபுத்தூர்.
    9 . ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீவில்லிபுத்தூர்.

    10.தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமண்டங்குடி.
    11. திருப்பாணாழ்வார் - உறையூர்.
    12. திருமங்கையாழ்வார் - திருவாலி திருநகரி
    Next Story
    ×