search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் நாளை கருடசேவை
    X

    பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் நாளை கருடசேவை

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை, நாளை நடக்கிறது. கருட சேவையையொட்டி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 23-ந் தேதி முதல் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் ஏழுமலையான் எழுந்தருளி பவனி வந்தார்.

    பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான, இன்று காலை தங்க கற்பக விருட்ச வாகனத்தில் வெங்கடேச பெருமாள் பவனி வந்தார். மாட வீதியில் வலம் வந்த மலையப்ப சாமியை கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இருந்து கொண்டு வரப்படும் மாலைகளும், இந்து தர்மார்த்த சமிதி சார்பில் புதிய வெண்பட்டுக் குடைகளும் ஏழு மலையானுக்கு சமர்பிக்கப்படுகிறது.

    இன்றிரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை, நாளை நடக்கிறது. நாளை காலை, மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் வீதிஉலா வருகிறார். இரவில் பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் பெருமாள், பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

    பெருமாளே வரமாக கேட்டு பெற்ற சிறப்பிற்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் விஷ பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

    எனவே, கருட சேவையை காண்பதற்காக, சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மேலும், 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்வ பாதுகாப்பில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கருட சேவையையொட்டி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×