search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி நாயகிகளும் நல்லருள் வடிவங்களும்
    X

    நவராத்திரி நாயகிகளும் நல்லருள் வடிவங்களும்

    அம்பிகையின் அருளை பெற பல விரதங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் நவராத்திரி விரதமே சிறந்தது என ஆகம நூல்கள் கூறுகின்றன.
    உலகை காக்கும் முப்பெரும் தேவியரையும் ஒன்றாக ஒருவருக்கு மூன்று நாள் வீதம் ஒன்பது நாள் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி திருவிழா. அம்பிகையின் அருளை பெற பல விரதங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் நவராத்திரி விரதமே சிறந்தது என ஆகம நூல்கள் கூறுகின்றன.

    நவராத்திரியின் நாயகிகளாக மலைமகள், அலைமகள், கலைமகள் விளங்குகின்றனர். மனிதர்களின் குணாதிசியமான தமோ குணம், ராஜோ குணம், சாத்வீக குணம் இம்மூன்றின் வடிவமாக மூவரும் திகழ்கின்றனர். தமோகுண நாயகியாக துர்கா பரமேஸ்வரியும், ராஜோ குண வடிவமாய் மகாலட்சுமியும், சாந்த சொரூபியாக சரஸ்வதி தேவியும் உள்ளனர்.

    இம்மூன்று சக்திகளும் தங்களுக்குள் பலவகைப்பட்ட அம்சங்களாக அருள் பாலிக்கின்றனர். மலைமகள் நவதுர்க்கை என்றவாறும், மகாலட்சுமி அஷ்டலட்சுமிகளாகவும், சரஸ்வதி அஷ்ட சரஸ்வதியாகவும் வகைப்படுத்தப்பட்டு வணங்கப்படுகின்றனர்.

    நவதுர்க்கையின் நல்வடிவங்கள்

    துர்க்கை என்பவள் வனதுர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவே தோ துர்க்கை ஜீவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துரிக்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, வலண துர்க்கை என்றவாறு ஒன்பது சொரூபமாக காட்சி தருகிறாள். முதல் மூன்று நாட்கள் துர்க்க பரமேஸ்வரியையும் அவள் அம்சங்களான நவ துர்க்கைகளையும் வேண்டி வீரத்தையும், தைரியத்தையும் பெற வேண்டும். மன வலிமையும், உடல் திடமும் வழங்கிட சக்தி வடிவான ரூபங்களை வணங்கிட வேண்டும்.



    அஷ்ட லட்சுமியின் அருட்பார்வை

    ராஜோ குணரூபியாக விளங்கும் ஸ்ரீ மஹாலட்சுமியை வணங்கி சகல செல்வங்களையும் பெற்றிட வேண்டும். லட்சுமியின் அம்சமாக அஷ்ட லட்சமிகள் விளங்குகின்றனர். அதாவது ஆதிலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, தானியலட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமி என்றவாறு அஷ்ட லட்சுமியாக அருள் புரிகிறாள்.

    நவராத்திரியின் இரண்டாம் முன்று நாட்கள் மகாலட்சுமியையும், அவர் வடிவமாக திகழும் அஷ்ட லட்சுமிகளையும் வணங்கி அருள் பெற்றிட வேண்டும். பணம், பொருள், புகழ் என சகல செளபாக்கியங்களையும் பெற மகாலட்சுமியையும் அவர் வடிவமாய் திகழும் லட்சுமிகளையும் வணங்கிட வேண்டும்.

    ஞானத்தை வழங்கும் அஷ்ட சரஸ்வதிகள்

    மேற்கூறிய இரு தேவியர் நவ அம்சங்களையும், அஷ்ட லட்சுமி வடிவங்களையும் பலரும் அறிந்திருப்பர். இதில் சரஸ்வதியின் அஷ்ட சரஸ்வதி பலரும் அறியாத ஒன்று.

    சாந்தமும், காத்வீக குணமும் பொருந்திய சரஸ்வதியின் அம்சங்களாக வாசீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்திஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி போன்றவர்கள் உள்ளனர். கல்வியறிவையும், ஞானத்தையும் வழங்கும் அஷ்ட சரஸ்வதியை நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் வணங்கிடுதல் வேண்டும். யாகங்களின் முடிவில் கூறப்படும் “ஸ்வாஹா” என்பதே சரஸ்வதியை குறிப்பிடுவது தான். பிரம்மதேவர் வேதங்களை சரஸ்வதியை வணங்கிய பின்னரே உருவாக்கினாராம்.

    அஷ்ட சரஸ்வதிகளில் கடசரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்தேஸ்வரியை காலி வாகன மன்னனும், சியாமள வடிவில் காளிதாசனும் வழிபட்டுள்ளனர். இத்தனை சிறப்பு மிக்க மூன்று தேவியரும் தங்களின் அம்சமாய் பல வடிவங்களில் நவராத்திரி காலங்களில் அருள்புரிகின்றனர்.
    Next Story
    ×