search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆயகலைகள் அறுபத்து நான்கு வழங்கும் கலைமகள்
    X

    ஆயகலைகள் அறுபத்து நான்கு வழங்கும் கலைமகள்

    கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள்.
    கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. கலைமகள் குறித்து கம்பர் பாடிய பாடலான

    “ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என்னம்மை -தூய
    உருப்பளிங்கு போல்வாற் என் உள்ளத்திலுள்ளே
    இருப்பளிங்கு வாராது இடர்”

    என்றவாறு கலைமகள் வணக்க பாடலை பாடியுள்ளார். இதன் படி பார்க்கும் போது ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதும். அதற்குரியவளான சரஸ்வதி தேவியை வணங்கிட அவை நமக்கு கிட்டிடும் என்பதும் புலணாகிறது. இப்படி பலரும் சிறப்பித்து கூறும் இந்த ஆயகலைகள் அறுபத்து நான்கும் என்ன என்பது பலரும் அறியாதது.

    துவாரக யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் குருகுல கல்வியை முறையாக “ஸாந்தி ஸ்ரீ” என்ற குருவிடம் கற்றனர். ஒரே ஒரு முறை குருவால் உபதேசிக்கப்பட்ட அனைத்து வித்தைகளையும் உள்வாங்கி கொண்டு கற்று கொள்வார்கள். இவர்கள் இருவரும் 64 நாள்கள் 64 வித்தைகளையும் ஐயம் இன்றி கற்று தெளிந்தனர்.

    அத்தகைய சிறப்பு மிகு மாணவர்கள் இன்றைய நாளில் யாரும் இல்லை. இருப்பினும் ஆய கலைகள் 64-ன் பெயர்களையும் அதன் சிறப்புகள் பற்றியாவது அறிவது வேண்டும்.



    வாழ்க்கைக்கு உகந்த உன்னத கலைகள்

    ஒவ்வொருவரும் தனக்கென பிடித்தமான ஏதேனும் ஓர் கலைகளை கற்று அறிதல் வேண்டும். ஆய கலைகள் 64-ன் பெயர்கள்:-

    1. அக்‌ஷர விவக்கணம் 2. இலிகிதம் 3.கணிதம் 4.வேதம் 5.புராணம் 6.வியாகரணம் 7.நீதி சாஸ்திரம் 8. ஜோதிட சாஸ்திரம் 9.தர்மசாஸ்திரம் 10.யோக சாஸ்திரம் 11.மந்திர சாஸ்திரம் 12.சகுன சாஸ்திரம் 13.சிற்ப சாஸ்திரம் 14.வைத்திய சாஸ்திரம் 15.உருவ சாஸ்திரம் 16. இதிகாசம் 17. காவியம் 18. அலங்காரம் 19.மதுரபாடனம் 20.நாடகம் 21.நிருத்தம் 22.சந்தப்பிரமம் 23.வீணை 24.வேணு (குழல்) 25.மிருதங்கம் 26.தாளம் 27.அக்கிர பரீட்சை 28.கனகபரீட்சை 29.ரச பரீட்சை 30.கச பரீட்சை 31. அசுவ பரீட்சை 32. ரத்தின பரீட்சை 33. பூமி பரீட்சை 34.சங்க கிராம இலக்கணம் 35.மல்யுத்தம் 36.ஆகருடணம் 37.உச்சாடணம் 38.விந்து வேடணம் 39.மதன சாஸ்திரம் 40.மோகனம் 41.வசீகரணம் 42.ரசவாதம் 43.காந்தருவ வாதம் 44.பைபீல வாதம், 45. கவுந்துக வாதம் 46. தாதுவாதம் 47.காருடம் 48.நட்பம் 49.முட்டி 50. ஆகாய பிரவேசம 51.ஆகாய கமணம் 52. பரகாய பிரவேசம் 53. அதிரிசயம் 54.இந்திரசாபம் 55. மகேந்திர சாபம் 56. அக்கினி தம்பம் 57. சலத்தம்பம் 58. வாயுத்தம்பம் 59. நிட்டி தம்பம் 60.வாக்குதம்பம் 61.சுங்கிலதம்பம் 62. கன்னதம்பம் 63.கட்கத்தம்பம் 64. அவத்தை பிரயோகம் என்றவாறு உள்ளன. இவற்றில் சில பிற்காலத்தில் மாறுபட்டவாறு தமிழுக்குரிய சொல்வழக்கில் அழைக்கப்படுகின்றன.

    உயர்வுக்கு வழிவகுக்கும் கலைகள்

    ஆயகலைகள் 64-கினை யும் ஒருவர் கற்று அறிந்து செயல்படுவது இன்றைய காலத்தில் கடினமானதே. ஆயினும் முந்தைய அரச பரம்பரை காலங்களில் அரச குடும்பத்தினர் இவற்றில் முக்கியமான பல கலைகளை கற்று தேர்ச்சி பெற்று பல வெற்றிகளை பெற்று உள்ளனர். இன்றைய நாளில் இவற்றில் உள்ள பல கலைகள் தொழிற்முறை கலைகளாக வாழ்வின் வருவாய்க்கு உதவும் வகையில் பலருக்கும் கைகொடுக்கின்றன. இசை கலைகள், அழகு கலைகள், சிற்ப சாஸ்திரம், ஜோதிடம், கணிதம், நாடகம் மருத்துவம், எழுத்தாற்றல், ஆடற்கலை போன்றவை தனித்தனியாக பயில்விக்கப்பட்டும், பயிற்சி அளிக்கப்பட்டும் கற்று தரப்படுகின்றன. நம் வாழ்வோடு பிணைந்த கலைகள் மட்டும் என்றும் அழியாது நம்மோடு பயணிக்கின்றன. ஆயகலைகள் அறுபத்து நான்கின் எதன் ஒன்றில் சிறந்து விளங்கிடினும் சரஸ்வதி தேவியின் அருள் நிச்சயம் தேவை.
    Next Story
    ×